“சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துகோன் குருபூஜையும் வாக்குவங்கி அரசியலும்”

கொரோனா வந்தாலும் யாதவ சமுதாயத்தை திருப்திபடுத்திய “திராவிட கட்சிகள்”.!
அரசியல் விமர்சகனாய் எனது பார்வை… //

இந்தா ரெண்டு சீட்டு “எடுத்துக்கோ” என்ற பிச்சை  இம்முறை யாதவர்களிடம் எடுபடாது. தேசிய அளவில் வழுவாக உள்ள யாதவர்களை தமிழகம் மட்டும் புறக்கணிப்பதா..? என கொந்தளிக்கும் யாதவ இளைஞர் கூட்டமைப்பு. திரைமறைவில் ஆலோசிக்கும் யாதவ இளைஞர்கள்.
கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் புறக்கணிக்கபட்ட சமுதாயமாக  இருந்த யாதவ சமுதாயத்தை நோக்கி ஒரு “வாக்கு வங்கி” அரசியலை தமிழக கட்சிகள் முன்னெடுக்கின்றன.

அதற்கு முழு காரணமாக பார்க்கபடுவது “பாஜகவும் கண்ணப்பனும்”.. ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதனை தமிழக அரசியல் களம் உணர்ந்திருக்கும். 

யாதவ சமுதாயத்தை புறக்கணித்ததால் “கண்ணப்பன்” அஇ.அதிமுகவில் இருந்து வெளியேறி “திமுக” ஆதரவை எடுத்தார். அதன் பலனை திமுக அறுவடை செய்தது. ஆகையால் இந்த முறை யாதவ சமுதாயத்திற்குரிய ஒரு அங்கீகாரத்தை கொடுக்க “திமுக” தயங்காது. அதன் வெளிப்பாடு தான் முதன் முறையாக அதன் தலைமை அலுவலகத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா அனுசரிப்பு. அது மட்டுமல்ல இம்முறையும் ஆட்சியை இழக்க  திமுக முட்டாள் அல்ல. ஆகையால் யாதவர்களுக்குரிய சரியான பிரதிநிதிதுவத்தை திமுக கொடுக்கும் என்பது ஐயமல்ல.

“திமுகவுக்கு இம்முறை இல்லாவிட்டால் இனி எப்போதும் வெற்றி இல்லை”…

அஇஅதிமுகவும் இம்முறை அந்தந்த பகுதியில் வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தினத்தை கொண்டாடியது. தன் தவறில் இருந்து பாடம் கற்று இருக்கும் அல்லவா.! திமுக யாதவர்களை  முன்னிலை படுத்தும் போது அஇஅதிமுகவும் யாதவர்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதனை மெய்பிக்க உரிய இடம் கொடுக்கும் என்பதும் மறுக்க முடியாது.

இரண்டிற்கும் மாற்றாக இந்த முறை சவாலான பாஜக. தமிழகத்தில் பரவலாக யாதவ சமுதாய இளைஞர்கள் பாஜகவை ஏற்றுகொண்டு விட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. திராவிட கட்சிகள் புறக்கணித்த சமுதாயங்களை ஒன்றிணைத்து பாஜக இம்முறை வலுவாக களமிறங்க அனைத்து வேலையும் செய்யும். பாஜக வின் இந்த செயல் திராவிட கட்சிகளுக்கு பெரும் தொந்தரவாக அமையும். ஆகையால் இதை தடுத்து யாதவர்களை ஈர்க்கும் பொருட்டு உரிய முக்கியத்துவம் கொடுத்தால் தான் “திராவிட கொள்கை” எடுபடும். இல்லையென்றால் அதன் பலனை “பாஜக அறுவடை” செய்யும். 

சமூக வலைதளங்களை உன்னிப்பாக தமிழக கட்சிகள் கவனித்தால் இங்கே பாஜகவின் கொள்கையை முன்வைப்பது யாதவ சமுதாய இளைஞர்கள் என்பதனை அறிந்திருக்கும். ஆகையால் பாஜக வளர்ச்சி திராவிடத்திற்கு ஆபத்து என்பதறிந்து இருபெரும் கட்சிகளும் இம்முறை யாதவர்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும். 
ஆனால் பாஜகவை முன்னெடுக்கும் யாதவர்களுக்குரிய இடத்தை பாஜக நிச்சயமாக கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை. 

ஆனால் கடந்த காலங்களில் எப்படியோ என்பது தெரியாது. ஆனால்  இம்முறை “12 சட்ட மன்ற தொகுதியை” இலக்காக வைத்து யாதவ சமுதாய இளைஞர்கள் மறைமுகமாக காய் நகர்த்த ஆரம்பித்து விட்டனர்.

அவர்கள் இம்முறை தெளிவாக இருக்கிறார்கள் பகுதி பெரும்பான்மைக்கு வாய்ப்பளித்து, பரவலாக வாழ்பவர்களை புறக்கணிப்பது தான் சமூகநீதியா என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.
சத்தமில்லாமல் யாதவ இளைஞர் கூட்டமைப்பு ஒரு முடிவை எடுத்துள்ளது..

பரவலாக வாழும் நம்மால் யார் வெற்றி பெற வேண்டும் என்பதனை விட யார் தோல்வி பெற வேண்டும் என தீர்மானிக்க முடியும் என தெளிவாக இருக்கிறார்கள்..
இருகட்சிகளுமே யாதவர்களுக்கு உரிய  வாய்ப்பளிக்காவிட்டால் “தேர்தல் புறக்கணிப்பு” என்ற முழக்கத்தை முன் வைக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக வாக்கு சதவீதம் குறையும் போது எல்லோருடைய பார்வையும் விழும் என எச்சரிக்கின்றனர். இம்முறை தங்கள் கணக்கான 12 சீட்டுக்களை யார் கொடுத்தாலும் ஆதரவளிக்க தயாராகி விட்டனர்…
காலம் பதில் சொல்லும். ஆனால் இம்முறை யாதவர்கள் ஏமாற தயாராக இல்லை.

முகவை யதுவம்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *