சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ 471 கோடி ஒப்பந்தம் ரத்து

புதுடில்லி: இந்தியாவில் கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே ரயில் பாதையில் சிக்னல் தொலைத் தொடர்பு பணிகளைச் செய்ய சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா, மேற்கு வங்கத்தின் தங்குனி இடையே சரக்குப் போக்குவரத்திற்கென்றே தனி ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் உ.பி., கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே 417 கி.மீ., தூரத்திற்கு சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பணிகளைச் செய்யும் ஒப்பந்தம் ஒன்று சீனாவின் பீஜிங் நேசனல் ரயில்வே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2016 ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளாக 20 சதவீத பணிகளே நிறைவடைந்துள்ளது. முறையாக பணிகளை முடிக்காத காரணத்தால் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 471 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே ரத்து செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *