துபாயில் இந்திய தம்பதியை கத்தியால் குத்தி கொன்ற பாக்,திருடன் கைது

துபாய் : துபாய் நகரின் அரேபியன் ரேஞ்சஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹிரேன் ஆதித்யா-விதி ஆதித்யா தம்பதி. இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர்கள் சார்ஜாவில் வர்த்தகம் செய்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 13 வயது ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 18 ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த நபர், வீட்டிற்குள் திருட நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த ஹிரன் மற்றும் வித்தி, ஒருவர் பின் ஒருவராக எழுந்தனர். இதனை கண்ட, குற்றவாளி இருவரையம் அடித்து கொன்றார். சத்தம் கேட்டு வந்த 18 வயது மகள் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றார். கழுத்தில் லேசான காயமடைந்த அவர், போலீசுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த தம்பதியின் மகளை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கிடந்த கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை கண்டுபிடித்து, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *