பாகிஸ்தானின் லாகூரில் நவ்லாஹா பஜாரில் பிரசித்தி பெற்ற ஷாஹிதி அஸ்தான என்ற பிரசித்தி பெற்ற குருத்துவாரா உள்ளது. சீக்கியர்களின் புனித தலமான கருதப்படும் இந்த இடத்தில் மஸ்ஜித் ஷாஹித் கஞ்ச் என்ற மசூதி உள்ளது. எனவே பிரசித்தி பெற்ற குருத்துவாரா, மசூதிக்கு சொந்தமானது எனவும், அங்கு குருத்துவாராவை மசூதியாக மாற்ற ஏற்பாடு நடந்து வருவதாக புகார் எழுந்தது.இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாக். தூதரக மூலம் குருத்துவாராவை மசூதியாக மாற்றக்கூடாது பாக்.அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அணுராக் ஸ்ரீவத்ஸவா கூறியுள்ளார்.