சீனா, பாகிஸ்தானிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய மாட்டோம் – மத்திய மந்திரி அறிவிப்பு

சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவி வரும் நிலையில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதனங்கள் இனி இறக்குமதிக்கு செய்யப்படாது என்று மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே.சிங் கூறினாா். இதுதொடா்பாக மாநில மின்துறை அமைச்சா்களுடன் வெள்ளிக்கிழமை காணொலி வழியில் ஆலோசனை மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதன இறக்குமதிக்கு இனி அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, மாநில மின் விநியோக நிறுவனங்கள் சீன நிறுவனங்களிடமிருந்து பொருள்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகளை அளிக்கவேண்டாம்.

சீனா, தான் அனுப்பும் பொருட்களில் கொடிய வைரஸ் மூலம் நமது மின்கட்டமைப்புகளை சிதைக்க வாய்ப்புள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *