தீவிரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என பாராளுமன்றத்தில் புகழ்ந்த இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: உலகமே தீவிரவாதி என்று அழைத்த ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் என்று கூறப்படும் கட்டிடங்களை விமானங்களை மோத வைத்ததால் அதில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இது குறித்து கருத்துக் கூறுகையில் ’பாகிஸ்தானுக்குள் நுழைந்து தியாகி ஒசாமா பின்லேடனை கொன்றது அமெரிக்கா’என்று கூறியுள்ளார். உலகின் ஆபத்தான தீவிரவாதிகளில் ஒருவராக கருதப்படும் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலேயே தியாகி என்று அந்நாட்டின் தற்போதைய பிரதமர்  கூறியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *