முதல் முறையாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடி செலவில் இந்து கோயில்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடியில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் கட்டப்படுகிறது. இக்கோயில் கட்டுமானத்திற்கு ரூ.10 கோடி செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நேற்று (புதன்கிழமை) இஸ்லாமாபாத்தின் எச்-9 பகுதியில் 20,000 சதுர யார்டுகளில் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மல்ஹி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மல்ஹி, ‘‘கடந்த 1947-ம் ஆண்டுக்கு முன் இஸ்லாமாபாத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான இந்து கோயில்கள் இருந்தன. கோயிலுக்குச் சென்று வழிபட ஆளில்லாமல் போய் காலப் போக்கில் அவை கைவிடப்பட்டன. கடந்த 20 ஆ ண்டுகளில் இஸ்லாமாபாத்தில் இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் அவர்கள் வழிபட கோயில் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்

இந்த கோயிலைக் கட்டும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது” என்று மத விவகார அமைச்சின் பிர் நூருல் ஹக் காத்ரி தெரிவித்தார். கோயிலின் கட்டுமானம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயுடன் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கானின் ஒப்புதலுடன் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்து அமைப்பினர் புதிய கோயிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என்று பெயர் சூட்டியுள்ளனர். கோயில் கட்டும் இடத்தை இந்து பஞ்சாயத்துக்கு 2017 ல் மூலதன மேம்பாட்டு ஆணையம் ஒப்படைத்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *