நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தார். இதனைத்தொடந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என தெரியவந்தது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார் எனவும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *