ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா

ஆந்திரபிரதேச மாநிலத்தில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 477 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.

தற்போது ஆந்திர மாநிலத்தில் நோய் பாதிப்பு 10,884. மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 19,085 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 477 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 10,884 ஆக உயர்ந்தது. 7 பேர் புதிதாக பலியாகினர். இதுவரை மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *