கான்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை

உத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது சாலை விபத்தில் அவர் சென்ற  கார் சிக்கியது. பின்னர் அங்கிருந்து அவர் தப்ப முயன்றபோது கொல்லப்பட்டதாக  போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி உட்பட 8 காவலர்களை கொன்ற விகாஸ் துபே பல இடங்களுக்கு தப்பி சென்றார். கான்பூரில் உள்ள தனது கிராமத்திலிருந்து ஹரியானாவின் ஃபரிதாபாத் வரை சென்றார், அங்கு போலீசார் வருவதற்கு சற்று முன்பு ஒரு ஹோட்டலில் இருந்து தப்பினார். பின்னர் 1,500 கி.மீ பயணத்தில் சோதனை செய்யப்படாமல் ராஜஸ்தானில் கோட்டாவிற்கும், இறுதியில் மத்திய பிரதேசத்திற்கும் சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார். விகாஸ் துபேவை கான்பூருக்கு அழைத்து வரும்வழியில் பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *