ஐநா சபை தொடங்கி லடாக் வரை, தமிழை மேற்கோள் காட்டும் பிரதமர் மோடி ..

ஒரு மொழிக்கு பெருமை தருவதே அதனுடைய இலக்கண இலக்கிய காப்பியங்கள் தான். அவை இந்த உலகிற்கு எதை எடுத்து சொல்லி உள்ளது என்பதை ஆராய்ந்தாலே அந்த மொழி பேசும் இன மக்களின் மேன்மையை அறிந்து கொள்ள முடியும்!

அந்த வகையில் இந்த உலகில் மூத்தகுடி தமிழர்கள் எனவும், அவர்களின் பண்டைய வாழ்வியல் உயர்ந்தது என்பதனையும் பாரதத்திற்கு மட்டுமல்லாமல் உலகிற்கு  மெய்பிக்கும் வகையில் பிரதமர் இக்கட்டான பல நேரங்களில் மேற்கோள் காட்டி பேசுவது நம் மொழிக்கான பெருமை ஆகும்!

Tamil is world classical language… 

அதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் “திருக்குறள்” அவையனைத்திலும் உயர்ந்தது. தமிழ் சமூகம் எப்படி வாழ்ந்தது என்பதனை திருவள்ளுவரின்  குறளே எடுத்துரைக்கிறது… 

ஒவ்வொரு அதிகாரமும் சொல்லும் கருத்துக்களை உலகில் எந்த நூல்களும் நிச்சயம் சொல்லி இருக்காது என்பதனை பிரதமர் உணர்ந்து உள்ளார்..

நிச்சயமாக “படையியல்” குறித்து உலகின் எந்த நூலும் தெளிவாக குறிப்பிட்டு இருக்காது.. இது ஒன்றே சாட்சி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர் அன்றே படையமைத்து போர் புரிந்து அரசாட்சி செய்துள்ளனர் என்பதனை தெளிவாக விளங்கி கொள்ளலாம்..

இன்றைய நவநாகரீக மக்களை செம்மைபடுத்த வேண்டுமெனில் உலகில் உள்ள அனைவரும் திருக்குறள் கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம்.. அதனை பிரதமர் குறிப்பால் உணர்த்துகிறார்.. 

பகவத்கீதை படிப்பது எப்படி பாரதத்தின் பெருமையை உலகறிய செய்கிறதோ அதை போலவே தமிழினத்தின் பெருமையை திருக்குறள் பறைசாற்றி நிற்கிறது… 

பல நேரங்களில் மொழி என்பது  என்பது வெறும் பேசு பொருள் மட்டுமே என பலர் முரண்பட்டுள்ளனர். ஆனால் பிறமொழிகள் சொல்லாததை தமிழ் மொழி உரைத்துள்ளது என்றால் அம்மொழி பேசியவனின் பண்டைய வாழ்வியல் எத்தனை உயர்ந்தது என்பதனை உணர முடிகிறது.

Proud of Tamilan

“தமிழன் என்பது நமக்கு பெருமையே” என்பது நம் மொழியை  பிறர் பேசும் போது தான் அந்த பூரிப்பை நம்மால் உணர முடிகிறது. இதே தமிழ் தான் பக்தி இலக்கியங்களையும் அதிகம் கொடுத்துள்ளது என்பதனை பிரதமர் அறிந்தால் தமிழார்வலர் ஆகி விடுவார் என்பது மறுப்பதற்கில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *