பிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

‘பாரதி சேவா சங்கம்’ என்பது பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவ ஆர்.எஸ்.எஸ்., (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) தொண்டர்களால் நடத்தப்படும் ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்தவும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் உதவவும் இந்த அமைப்பினர் தன்னார்வலர்களாக களமிறங்கியுள்ளனர்.

மேற்கு வங்கம் முதல் கேரளா வரை கொரோனா நிவாரணப் பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரா 26,000, கர்நாடகத்தில் 8,400 கேரளாவில் 42,000 தன்னார்வலர்கள் இணைந்து செய்த சேவையில், கேரளாவில் 42 லட்சம், கர்நாடகாவில் 3 லட்சம், சட்டீஷ்கரில் 2 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.மேலும், கொரோனா ஊடரங்கின் போது, 5.07 லட்சம் ஆர்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள், 4.66 கோடி உணவு பொட்டலங்களை மக்களுக்கு வழங்கியுள்ளனர். 44.86 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர் திரும்ப உதவியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழவர்களின் சடலங்களை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்ய 100 பேர் கொண்ட தன்னார்வலர்கள் இணைந்து செயலாற்றி வருகின்றனர். மேலும், மகாராஷ்ராவில் 24 ஆயிரம் பேர் பிளாஸ்மா ரத்த தானம் செய்துள்ளனர். சட்டீஷ்கரில் பிளாஸ்மா தானம் செய்ய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவி வரும் இந்த தன்னார்வலர்களை, பல்வேறு தரப்பபினரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *