கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்கத்தை மீறியதற்காக மூத்த தலைவர் முன்னாள் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜாவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காக ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்டுக்காக அவர் ட்வீட் செய்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் அவரை இடைநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து ஆங்கில நாளேடு ஒன்றில் சஞ்சய் ஜா கடந்த மாதம் கட்டுரை எழுதியிருந்தார். அதுமட்டுமல்லாமல் ஜோதிர் ஆதித்யா சிந்தியா காங்கிரஸ்கட்சியிலிருந்து விலகியபோது அதைத் தடுக்காமல் காங்கிரஸ் தலைமை செயல்பட்டது, சச்சின் பைலட் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை செயல்பட்டவிதம் குறித்து கருத்து தெரிவித்த நிலையில் சஞ்சய் ஜா மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
.