இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்ட முன்னாள் தி.மு.க. எம்பி. அர்ஜுனன்

சேலம்: நாளுக்கு நாள் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், குறிப்பாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஊரடங்கு விதி கடுமையாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது வாகன போக்குவரத்துக்கு மண்டல முறை அமலில் உள்ளதால், மண்டலங்களின் பிற மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும், மக்களின் பயணங்களை இதனால் தடுக்க இயலவில்லை என்றும், எனவே, வாகன போக்குவரத்தில் மண்டல முறைக்கு பதில், இ-பாஸ் இல்லாமல், மாவட்டத்துக்குள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், வேறு மாவட்டங்களுக்கு செல்லவோ, பிற மாவட்டங்களில் இருந்து வரவோ இ-பாஸ் பெற்றே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் சேலம் போலீசார், அந்த வழியாக வந்த தர்மபுரி  முன்னாள் எம்பி அர்ஜுனன் காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அதற்கு, அவர், “நான் முன்னாள் எம்.பி., என்னிடமே ஆவணத்தை கேட்கிறியா, என காரிலிருந்து இறங்கி போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அவர் தகாதா வாரத்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அர்ஜுனன் மீண்டும் காரில் அமர்ந்து, புறப்படுவதற்கு தயாரான நிலையில், மீண்டும் கீழே இறங்கி வந்து, காவல் அதிகாரியை தள்ளிவிட முயன்றார். பதிலுக்கு காவல் அதிகாரியும் அவரை தாக்கினார். பின்னர் அர்ஜுனன் உதவி காவல் ஆய்வாளரை காலால் எட்டு உதைத்தார். இதையடுத்து பணியில் ஈடுபட்டு இருந்த மற்ற அதிகாரிகள் தலையிட்டு சமாதானப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து முன்னாள் எம்.பி காரில் புறப்பட்டு சென்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *