தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 4,150 பேரில் சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 66,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.