குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசுவதற்குத் தடைவிதித்ததைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு, பொது மேலாளராக சஞ்சய் வக்லு உள்ளார். அவரை, தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது, நிர்வாகிகள் தமிழில் பேசினர். ஆனால், சஞ்சய் வக்லு, நிர்வாகிகள் தமிழில் பேசக்கூடாது. ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் பேச வேண்டும். தமிழில் பேசினால் பதில் கூற மாட்டேன். தொழிற்சாலையிலும் தமிழில் பேசக்கூடாது எனக்கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள், பல நிகழ்ச்சிகளில் திருக்குறள் குறித்து பிரதமர் மோடி மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், இங்கு தமிழில் பேசுவதற்கு தடை விதிக்கப்படுவதை ஏற்க முடியாது எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.