சீனாவில், கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக பரவ வாய்ப்புள்ள காய்ச்சல்: சீனாவில் பன்றிகளிடையே பரவல்

சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலிலிருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதிய காய்ச்சல் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

2019 டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதுவரை 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்கள். உலக நாடுகள் பலவும் கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பாதிப்பு இன்னும் அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இப்போது இது உடனடியான பிரச்சனை இல்லை என்றாலும், பின் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு.

இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது.

இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங். இந்த வைரஸை G4 EA H1N1 என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *