இராமநாதபுரம் : பட்டினம்காத்தான் முதல்நிலை ஊராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மூன்று ஒன்றிய கவுன்சில் வார்டுகளையும், பல்வேறு கிராமங்களையும் உள்ளடக்கியது பட்டினம்காத்தான் ஊராட்சி. ஊராட்சிமன்றத்தேர்தலில் K.K.சாத்தையா, சித்ராமருது, ஸ்டாலின், ராஜ்மோகன் உட்பட 8 பேர்கள் களத்தில் இருக்க, திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் ஒன்றியக் கவுன்சில் மற்றும் மாவட்டக்கவுன்சில் வார்டு உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறனர்.
கடந்த நான்கு நாட்களாக பிரச்சாரம் சூடுபிடித்துள்ளதால், வேன்கள், மற்றும் ஆட்டோக்களில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளின் மூலம் நான்குதிசைகளிலிருந்தும் பிரச்சரம் செய்யப்படுக்கொண்டிருக்கிறது.
யார் வந்தாலும் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்….!!!!