திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நலப்பணிகளில் ஈடுபட்டு வந்த  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.  முதன்முதலாக திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *