டெல்லியில் வீடு வீடாக சென்று ரேஷன் வழங்கப்படும் – முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லியில் வீடு வீடாக ரேஷன் வழங்கப்படும். டெல்லி அமைச்சரவை முதலமைச்சர் “கர் கர் ரேஷன்” திட்டத்தை (வீட்டுக்கு வீடு ரேஷன்) அனுமதித்துள்ளது. வீடு வீடாக ரேஷன் திட்டத்தை அமல்படுத்தும்போது, ​​வீட்டிற்கு நேரடியாக ரேஷன் கொண்டு செல்லப்படும். அதாவது, டெல்லி மக்கள் இனி ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை.

ரேஷன் திட்டத்தின் டோர்ஸ்டெப் டெலிவரி மூலம் டெல்லியில் வசிக்கும் சுமார் 72 லட்சம் மக்கள் ஒவ்வொரு மாதமும் பயனடைவார்கள். இவர்கள் தற்போது ரேஷன் வாங்கிக்கொண்டு இருக்கும் பட்டியலை சேர்ந்தவர்கள். டெல்லி அரசாங்கத்தின் முதலமைச்சரின் வீட்டுக்கு வீடு ரேஷன் திட்டம் தொடங்கும் அதே நாளில், மத்திய அரசின் ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு திட்டம் டெல்லியில் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சரின் வீட்டுக்கு வீடு ரேஷன் திட்டத்தில் கீழ், டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு இரண்டு விருப்பம் வழங்கப்படும். ஒன்று நேரடியாக மானிய கடைக்கு சென்று தாங்களாகவே சாமான்களை வாங்கிக்கொள்வது அல்லது வீட்டுக்கு விநியோகம் செய்யப்படுவது. இந்த இரண்ட்டில், ஒன்றை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதில் வீட்டு விநியோகத்தில், கோதுமைக்கு பதிலாக, கோதுமை மாவு வழங்கப்படும். அடுத்த 6-7 மாதங்களில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று டெல்லி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *