பீஹாரில், புதுமாப்பிளை கொரோனாவால் மரணம், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா

பாட்னா: பீஹாரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் கொரோனா அறிகுறியுடன் இருந்த புது மாப்பிள்ளை உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் ஜூன் 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை மரணமடைந்தார். அவருடைய பிரேதத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதற்கிடையே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சோதனையை மேற்கொண்டதில், 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Outlookindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *