கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கே. ராஜாமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது, அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் உறுதியாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு பின் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. ஆனால் ஜுலையில் இந்த வேகம் கடுமையாக அதிகரித்தது. சென்னை போன்ற பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களால் கோவையில் கொரோனா கடுமையாக அதிகரித்தது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சி தலைவர் ராஜாமணியே களத்தில் இறங்கி கொரோனா தடுப்பு பணி ஆற்றினார். கொரோனா பாதித்த பல இடங்களுக்கு சென்று பணிகளை செய்து வந்தார். இதனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் சோதனை நடத்தப்பட்டது. இதில் கலெடர் ராஜாமணிக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதியானது. இதையடுத்து தன்னை தானே கலெக்டர் ராஜாமணி தனிமைப்படுத்திக்கொண்டார். இப்போது அவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.