கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் சீனாவில் இரண்டாம் கட்ட அவசரகால நிலை அறிவிப்பு

சீனாவின் நீர்வள அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான அவசரகால நிலையை இரண்டாம் நிலைக்கு உயர்த்தி அறிவித்திருக்கிறது. அவசர நிலை இரண்டாம் கட்டத்திற்கு செல்வது மிகவும் அபாயமான நிலையை  குறிக்கிறது.  பருவமழைக் காலத்தில் கனமழையால் ஏற்கனவே வெள்ளச் சேதங்களை சந்திருக்கும் சீனாவில் தற்போது வெள்ள எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஜூலை 4 முதல் , நாடு முழுவதும் 212 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்லம் கரை புரண்டு ஓடுகின்றன, அவற்றில் 19 ஆறுகளின் நீர் மட்டமானது, இதற்கு முன்பு எப்போதும் பதிவாகாத ஒன்று என சீனாவின் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு அன்ஹுய் மற்றும் ஜியாங்சி மாகாணங்கள் உட்பட சீனாவில் 27 மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 141 பேர் இறந்துவிட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *