ரக்ஷாபந்தன், 4000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் சீனா.!

நாடு முழுவதும் சீன பொருள்களை புறக்கணிக்கும்  முயற்சிகள் தொடங்கிவிட்ட நிலையில், அதன் அடுத்தகட்டமாக இந்தியா ஒரு படி மேலே சென்றுவிட்டது. மேக்  இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே பொருட்களை தயாரித்து தன்னிறைவு பெற வேண்டும் என்ற இலக்கின் முதல் கட்டம் இப்போது நிறைவேறுகிறது.  இந்தியாவின் இந்த செயல்பாடு, ஒருபுறம் சீனாவுக்கு பொருளாதார ரீதியாக நட்டத்தை ஏற்படுத்தினால், மறுபுறம் நம் நாட்டில் லாக்டவுனால் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.
 
வழக்கமாக சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதிச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த ராக்கி, இந்த ஆண்டு உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சீனாவின் ராக்கிகளை யாரும் வாங்கவோ விற்கவோ மாட்டார்கள். 

இதற்காக, நாட்டின் பல்வேறு நகரங்களில், வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ராக்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சீன பொருட்களைப் புறக்கணிப்பதற்காக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது, சீனாவிற்கு சுமார் 4000 கோடி மதிப்புள்ள பொருட்களுக்கான ஆர்டர்கள் இந்தியாவில் இருந்து கிடைக்கும். இந்த முறை இந்த வர்த்தகம்   தன்னிறைவு பெறும் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

டெல்லி, நாக்பூர், போபால், குவாலியர், சூரத், கான்பூர், டின்சுகியா, குவஹாத்தி, ராய்ப்பூர், புவனேஸ்வர், கோலாப்பூர், ஜம்மு, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் ராக்கி தயாரிப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. லக்னோ, வாரணாசி, ஜான்சி, அலகாபாத் போன்ற பிற நகரங்களிலும் ராக்கி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *