பூட்டானில் நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறது சீனா: தொடரும் அத்துமீறல்

திம்பு: தென் சீனக் கடலில் இருந்து லடாக் வரை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இப்போது பூட்டானில் உள்ள ஒரு புதிய நிலத்திற்கு உரிமை கோரியுள்ளது. உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின் 58 வது கூட்டத்தில், பூட்டானில் உள்ள சாகடெங் வனவிலங்கு (Sakteng Wildlife Sanctuary) சரணாலயத்தின் நிலம் “சர்ச்சைக்குரியது” என்று சீனா விவரித்தது. இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை எதிர்க்க முயன்றது. சீனாவின் நடவடிக்கையை  கடுமையாக எதிர்த்ததுடன், இந்த நிலம் எங்கள் நாட்டுடன் ஒருங்கிணைந்த பகுதி என திட்டவட்டமாக கூறியுள்ளது பூட்டான்.

சீனாவின் கூற்றுக்கு மாறாக, முந்தைய காலத்தில் சரணாலயம் நிலம் தொடர்பாக ஒருபோதும் சர்ச்சை ஏற்படவில்லை என்பதே உண்மை. இருப்பினும், பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை இல்லை. சீனாவின் இந்த மோசமான நடவடிக்கையை பூட்டான் கடுமையாக எதிர்த்தது. சீனாவின் இந்த கூற்றை பூட்டான் ஆட்சேபித்தது, “சாகடெங் வனவிலங்கு சரணாலயம் பூட்டானின் ஒருங்கிணைந்த மற்றும் இறையாண்மை கொண்ட பகுதியாகும்.” எனவும் கூறியது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *