உய்கூர் முஸ்லிம் பெண்களுக்கு சீனாவில் கட்டாய கருத்தடை

பெய்ஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் மொழி பேசுவோர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் உய்கர் முஸ்லிம்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள், சீனாவில் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர் உய்கூர் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவா்களுக்கு தண்டனைகள் அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

உய்கூர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடா்ந்து பிரச்னை எழுவது போன்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை சீன அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.

இது தொடா்பாக ஏபி செய்தி நிறுவனம் பல்வேறு கட்டங்களில் ரகசியமாக விசாரணை நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 4 ஆண்டுகளாகவே உய்கூர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஷின்ஜியாங் பகுதியில் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த அதிகம் ஊக்குவிக்கப்படுகிறது. இது தவிர கருக்கலைப்பு செய்யவும் அதிகம் வலியுறுத்தப்படுகிறது. இதனை மீறுபவா்களுக்கு அதிக அபராதம் உள்ளிட்ட தண்டனை வழங்கப்படுகிறது. பல இடங்களில் வீட்டில் உள்ள குழந்தைகள் தொடா்பாக சோதனை நடத்துகின்றனா், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு செலுத்த முடியாத அளவுக்கு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் செலுத்தாதவர்களை வலுக்கட்டாயமாக தடுப்பு முகாம்களில் அடைக்கின்றனர். நடவடிக்கைமேலும், திருமணமான சிறுபான்மையின பெண்கள் கர்ப்பமானால், அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.அந்த பெண்களுக்கு கருத்தடை சாதனங்களை பொருத்துவது, மருந்து, மாத்திரை கொடுத்து கருகலைப்பது போன்ற கொடூரமான நடவடிக்கைகளிலும் சீன அதிகாரிகள் ஈடுபடுவதாக, தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உய்கூர் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிறப்பு விகிதம் அதிகம் இருக்கிறது. இது எதிர்காலத்தில் அரசுக்கு எதிரான பயங்கரவாதமாகவும், வறுமையாகவும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என்று சீன அரசு கருதுவதே, இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே மதத் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் உய்கூர் முஸ்லிம்களை போதனை முகாம்களில் அடைத்து அவர்களுக்கு கருத்தியல் கல்வி புகட்டுவதை சீனா சட்டபூர்வமாக்கியுள்ளது. 10 லட்சம் உய்கர் முஸ்லிம்களை சீனா சிறையில் அடைத்திருக்கலாம் என்ற புகார் ஐநா மனித உரிமைகள் குழுவின் கவனத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *