சென்னை: சென்னையில் கொரோனா உறுதியான 277 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30,444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா உறுதியான 277 பேர் மாயமாகியுள்ளனர். தவறான மொபைல் எண், முகவரி அளித்து அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி அளித்த தகவலின் பேரில், சைபர் கிரைம் உதவியுடன் போலீசார், மாயமானவர்களை தேடி வருகின்றனர்.