Category: World

வங்காள தேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 23 பேர் பலி

வங்கதேசத்தில் படகுடன் மோதி மற்றொரு படகு, ஆற்றில் மூழ்கியதில் 23 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் டாக்கா நகரில் உள்ள புரிகங்கா நதியில், ஆட்களை ஏற்றிகொண்டு சென்ற படகு ஒன்று, மற்றொரு படகுடன் மோதி கவிழ்ந்தது. தகவலறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 23 பேரது சடலங்கள் மீட்கப்பட்டன, தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த படகில் 50 க்கும் மேற்பட்ட […]

ஆப்கானிஸ்தான், கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் மனித உரிமைகள் அமைப்பினர் 2 பேர் பலி

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுல் நகரில் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் பயணம் செய்த காரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அதில் பயணம் செய்த மனித உரிமைகள் அமைப்பினர் இரண்டு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், ஊழியர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு மனித […]

தீவிரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என பாராளுமன்றத்தில் புகழ்ந்த இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: உலகமே தீவிரவாதி என்று அழைத்த ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் என்று கூறப்படும் கட்டிடங்களை விமானங்களை மோத வைத்ததால் அதில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இது குறித்து கருத்துக் […]

முதல் முறையாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடி செலவில் இந்து கோயில்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடியில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் கட்டப்படுகிறது. இக்கோயில் கட்டுமானத்திற்கு ரூ.10 கோடி செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நேற்று (புதன்கிழமை) இஸ்லாமாபாத்தின் எச்-9 பகுதியில் 20,000 சதுர யார்டுகளில் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மல்ஹி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மல்ஹி, ‘‘கடந்த 1947-ம் ஆண்டுக்கு முன் இஸ்லாமாபாத்திலும் […]