Category: World

இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்ற பிரிட்டன் எம்.பி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணம் மேற்கொள்ளவும், இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரகாம்ஸ், பாகிஸ்தான் அரசிடம் இருந்து பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. மத்திய அரசு கடந்தாண்டு ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி […]

பாகிஸ்தான், தலிபான் அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலக பயங்கரவாதியாக ஐ.நா அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக, ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக்-இ தலிபானின் பாகிஸ்தான் தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சுத்தை உலக பயங்கரவாதியாக அறிவித்தது. இதனையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது; அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும். ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் ISIL மற்றும் அல்கொய்தா தடைகள் பட்டியலில் மெஹ்சுட்டைச் சேர்த்தது. அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஆதரவாகவும், சேர்ந்தும், செயல்பட்டு அவர்களுக்கு நிதியுதவி […]

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை குறித்து சில வாரங்களில் முடிவு

அமெரிக்காவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் டிக் டாக், வீசாட் உள்ளிட்ட சீனச் செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் அதிபர் ட்ரம்ப்புக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில், ”சீனாவின் டிக் டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளால் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா, மக்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுகிறதா என […]

கொரோனா பரிசோதனையில் மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சியால் உயிரிழந்த குழந்தை

சவுதி அரேபியாவில் அப்துல்லா அசிஸ் அல் குபான் என்ற 18 மாத ஆண் குழந்தையை, தீவிர காய்ச்சல் காரணமாக அங்குள்ள ஷக்ரா பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் குச்சி, அதாவது மூக்கினுள் சளி மாதிரிகளை எடுக்கப் பயன்படும் குச்சியை குழந்தையின் மூக்கில் விடும்போது அது உடைந்துள்ளது. டாக்டர்கள் மயக்க மருந்து […]

சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகளை பயன்படுத்த இங்கிலாந்து அரசு தடை

இங்கிலாந்து மொபைல் ஆப்ரேட்டர்கள் 2027ம் ஆண்டிற்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.  ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதே போல் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அந்நிறுவனத்தின் 5ஜி கருவிகளை கொள்முதல் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை டிஜிட்டல் செயலாளர் ஆலிவர் […]

ராமர் குறித்த பிரதமரின் கருத்து அரசியல் சார்ந்தது இல்லை – நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கடவுள் ராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல என்றும் நேபாள நாட்டில் பிறந்தவர் என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் தெரிவித்திருந்தார். அயோத்தி என்பது நேபாளத்தில் பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். அங்குதான் ராமர் பிறந்தார் என அவர் கூறினார். […]

நேபாளத்தில் கடும் வெள்ளம், நிலச்சரிவுக்கு 60 பேர் பலி, 41 பேர் மாயம்

நேபாளத்தில் கடந்த 4 நாட்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 60 பேர் பலியாகியுள்ளனர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 41 பேரைக் காணவில்லை. கனமழையால், நேபாளத்தின் மேற்கே மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  இதனால் அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். நேபாளத்தில் பருவமழை காலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கத்திற்குரிய ஒன்றாகி […]

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் சீனாவில் இரண்டாம் கட்ட அவசரகால நிலை அறிவிப்பு

சீனாவின் நீர்வள அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான அவசரகால நிலையை இரண்டாம் நிலைக்கு உயர்த்தி அறிவித்திருக்கிறது. அவசர நிலை இரண்டாம் கட்டத்திற்கு செல்வது மிகவும் அபாயமான நிலையை  குறிக்கிறது.  பருவமழைக் காலத்தில் கனமழையால் ஏற்கனவே வெள்ளச் சேதங்களை சந்திருக்கும் சீனாவில் தற்போது வெள்ள எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஜூலை 4 முதல் , நாடு முழுவதும் 212 ஆறுகளில் அபாய அளவை […]

பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 968 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 24 மணி நேரத்தில் 968  பேரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 71,492  ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பிரேசிலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,40,812 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிடம் உலகம் கற்றுக்கொள்ள வேண்டும் – இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்ற “இந்தியா குளோபல் வீக்” என்னும் இந்திய உலகளாவிய வார உச்சி மாநாட்டில், அந்த நாட்டின் இளவரசர் சார்லஸ், காணொலி காட்சி வழியாக பங்கேற்று பேசினார். அப்போது அவர், இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறையை புகழ்ந்துரைத்தார். நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது.. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியில் […]