Category: World

சீன அதிகாரிகளுக்கு பயணத் தடை விதித்து அமெரிக்கா அதிரடி

அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் சீனாவுடனான தனது இராஜதந்திர போரில் புதிய நடவடிக்கையாக சீன அதிகாரிகள் மீது பயணத் தடைகளை விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்து மைக் பாம்பியோ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ திபெத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சீன நாட்டு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை  விதித்து இன்று அறிவிப்பு வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “  சீனாவின் தன்னாட்சி பகுதியாக […]

கொரோனா பரவல் அதிகரிப்பு , ஆஸ்திரேலியாவில் 6 வார ஊரடங்கு

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அங்கு 100 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாகாணங்களுக்கு இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவியதைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் மிகவும் வேகமாகப் பரவியது. அங்கு பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மே மாத இறுதியில் கொரோனா பரவல் 75% கட்டுக்குள் வந்தது. இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த […]

பாகிஸ்தான்: ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஹிந்து கோவிலின் கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு அங்கு எதிர்ப்பு எழுந்த போதும், கட்டுமான பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அமர் பரூக் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாகிஸ்தான் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா காலித் மெக்மூத் கான் […]

சீன அடக்குமுறைகளுக்கு எதிராக நீதி கேட்டு பன்னாட்டு நீதிமன்றத்தை அனுகிய உய்குர் முஸ்லிம்கள்

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதான முதல் முறை முயற்சியாகும் இது. சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற அந்நாடு திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை […]

இந்தையாவை பின்பற்றி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகள் அமெரிக்காவிலும் தடை

அமெரிக்க மாநிலச் செயலாளர் மைக் பாம்பியோ விரைவில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். டிக் டாக் உடன் மேலும் சில சீன செயலிகளையும் தடை செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். பாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தபோது அவர் இச்செய்தியை வெளியிட்டார். சீன ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகள் அமெரிக்கர்களின் தனிநபர் தகவல்களை நோட்டம் விடுவதாகவும் திருடுவதும் அமெரிக்க அரசு கருதுகிறது. சீன கம்யூனிச அரசு […]

திபெத் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை வரவேற்று சீனாவை சீண்டும் தைவான்!

சீனாவை கோபப்படுத்தும் வகையில் தலாய் லாமாவை தனது நாட்டிற்கு வருகை தர வேண்டும் என தைவான் வரவேற்றுள்ளது. தைவான் அதிபரின் இந்த நடவடிக்கையை சீனா சந்தேக கண் கொண்டு பார்க்கிறது.  தைவான் ஏற்கனவே சீன குடியரசு என்று அழைக்கப்படும் ஒரு சுதந்திர நாடு என்று தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறுகிறார். சீன குடியரசு என்பது தைவானின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். நாடுகடத்தப்பட்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் […]

குவைத்திலிருந்து வெளியேற்றப்படும் 8 லட்சம் இந்தியர்கள்!

குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்டமன்றக் குழு 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வரைவு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின்படி, குவைத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையானது மொத்த மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினை தாண்டக்கூடாது என வரையறுத்துள்ளது. இதற்கான ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்படுகின்றது. இந்த மசோதாவின்படி அந்நாட்டில் உள்ள 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும். ஏனெனில் இந்திய […]

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வுக்கு பின் வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

கடந்த மாதம் ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொண்ட சவூதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சவூதி அரேபியாவில் வைரஸ் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில்  50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாத மத்தியில் ஊடரங்கை பிறப்பித்த இந்த இரண்டு நாடுகளும் அவற்றை படிப்படியாக விலக்கி, முழுமையான வர்த்தக நடவடிக்கைகளை […]

அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது துப்பாக்கிச்சூடு – 27 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) நாட்டின் 244-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. குறிப்பாக வார விடுமுறை நாள் என்பதால் கேளிக்கை விடுதிகளிலும், இரவு விடுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். இதில் பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் சுதந்திரதினம் கொண்டாடப்பட்ட கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் 100-க்கும் […]

சீனா போர் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கு விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா

  தென் சீன கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்த கடற்பரப்பில் அமைந்துள்ள அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான்,தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கிவருகிறது.        இதற்கிடையில், தென்சீன கடற்பரப்பில் அமைந்துள்ள பரசல் தீவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பகுதிகள் சர்வதேச கடல்பகுதியாகும்.  இதனால் […]