Category: Tamil Nadu

ஐநா சபை தொடங்கி லடாக் வரை, தமிழை மேற்கோள் காட்டும் பிரதமர் மோடி ..

ஒரு மொழிக்கு பெருமை தருவதே அதனுடைய இலக்கண இலக்கிய காப்பியங்கள் தான். அவை இந்த உலகிற்கு எதை எடுத்து சொல்லி உள்ளது என்பதை ஆராய்ந்தாலே அந்த மொழி பேசும் இன மக்களின் மேன்மையை அறிந்து கொள்ள முடியும்! அந்த வகையில் இந்த உலகில் மூத்தகுடி தமிழர்கள் எனவும், அவர்களின் பண்டைய வாழ்வியல் உயர்ந்தது என்பதனையும் பாரதத்திற்கு மட்டுமல்லாமல் உலகிற்கு  மெய்பிக்கும் வகையில் பிரதமர் இக்கட்டான பல நேரங்களில் மேற்கோள் காட்டி […]

பத்து வருடங்களுக்கு பின்னர் அரசு பள்ளிகளில் கலைஞர் டிவி: திருச்சியில் பரபரப்பு!

தமிழகத்தில், 2006 – 11ல், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பொது மக்கள் அனைவருக்கும் இலவச கலர் ‘டிவி’க்கள் வழங்கப்பட்டன. இந்த, ‘டிவி’க்கள் தரம் இல்லாமல், சில ஆண்டுகளில் பழுதடைந்தன. இலவச கலர், ‘டிவி’ வழங்கும் திட்டத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படாமல், அந்தந்த மாவட்டங்களில் உள்ள குடோன்களில் பல ஆயிரம், ‘டிவி’க்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள குடோன்களில் பாதுகாக்கப்பட்ட, கலைஞர், ‘டிவி’க்கள், இரண்டு நாட்களாக, மாவட்டத்தில் […]

படங்களை மார்பிங் செய்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பு- 2 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் பிரத்யேக செல்போன் 94899 19722 எண்ணில் தொடர்பு கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் படங்களை மார்பிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகின்றனர். மேலும், அந்த பெண்களை மிரட்டி வீடியோ காலில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என்று […]

சாத்தான்குளம் வழக்கில் இரண்டு காவலர்கள் கைது

சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு […]

ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 தமிழக, கேரள மீனவர்கள் தூத்துக்குடி வந்தனர்

தூத்துக்குடி: ஈரானில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 687 மீனவர்களுடன் இந்திய கடற்படை கப்பல் ‘ஐஎன்எஸ் ஜலஸ்வா’ இன்று காலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேர்ந்தது. கப்பலில் வந்தவர்களை தமிழக செய்தி மற்றும் விளம்பத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனை முடிந்த பிறகு கப்பலில் வந்த […]

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலி: அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கொரோனா கட்டுக்குள் வந்தபாடில்லை.  கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களில் ஒருவராக இருக்கும் காவல்துறையினரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  கொரோனா பாதிப்பு காரணமாக  சென்னை காவல் துறையில் இரண்டாவது காவலர் பலியாகியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி […]

சோதனைச் சாவடியில் லாரி மோதி காவலர் பரிதாப பலி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சென்னிமலை சாலையிலுள்ள திட்டுப்பாறையில் கொரோனா பரவல் தடுப்பிற்காக காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடி கண்காணிப்பு பணியில் ஆயுதப்படை காவலர் பிரபு (23) , தலைமை காவலர் மற்றும் மருத்துவ குழுவினர் ஈடுபட்டிருந்தினர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடியில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் வந்துள்ளது. இதுகுறித்த தகவல் திட்டுப்பாறை சோதனை […]

செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா!

விழுப்புரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் செஞ்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் கொரோனா தொற்று பாதித்த நான்காவது […]

தமிழகத்தில் தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5000 பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ் கலப்படமில்லாத தூய தனி மொழி. உலக முதல் தாய்மொழியின் 80 சதவீத சொற்கள் இன்றைய தமிழில் உள்ளன. சங்க காலத்திற்கு முந்தைய தமிழில் 100 சதவீத சொற்கள் முதல் தாய்மொழி சொற்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தமிழ் மொழியை வளர்ப்பதிலும், புதிய சொற்களைக் கண்டறிவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நடைமுறை வாழ்க்கையில் கலப்புச் சொற்கள் […]

போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை – மகன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி; ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கில் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு போட வேண்டும் என்றும் அவர்கள் […]