Category: Tamil Nadu

“சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துகோன் குருபூஜையும் வாக்குவங்கி அரசியலும்”

கொரோனா வந்தாலும் யாதவ சமுதாயத்தை திருப்திபடுத்திய “திராவிட கட்சிகள்”.!அரசியல் விமர்சகனாய் எனது பார்வை… // இந்தா ரெண்டு சீட்டு “எடுத்துக்கோ” என்ற பிச்சை  இம்முறை யாதவர்களிடம் எடுபடாது. தேசிய அளவில் வழுவாக உள்ள யாதவர்களை தமிழகம் மட்டும் புறக்கணிப்பதா..? என கொந்தளிக்கும் யாதவ இளைஞர் கூட்டமைப்பு. திரைமறைவில் ஆலோசிக்கும் யாதவ இளைஞர்கள்.கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் புறக்கணிக்கபட்ட சமுதாயமாக  இருந்த யாதவ சமுதாயத்தை நோக்கி ஒரு “வாக்கு வங்கி” அரசியலை தமிழக […]

துப்பாக்கியால் சுட்ட வழக்கில் திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது

செங்கல்பட்டு மாவட்டம் செங்காடு பகுதியில் எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும், இமயம் குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று  மாலை […]

தாய் நாட்டிற்காக உயிர்நீத்த மாவீரன் அழகுமுத்துக்கோனை நினைவுகூர்ந்து வணங்கி போற்றுவோம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வீரம் என்ற சொல்லுக்கு அர்த்தமாக என்றும் விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்கள் நமது தாய்நாட்டிற்காக உயிர்நீத்த தினம் இன்று. அந்த மகத்தான தியாகியை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கி போற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வர் K. பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரவம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு “paul harries fellow” என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் […]

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அமைச்சருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லுர்ர் ராஜூ விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையில் பணியாற்றிய பலரும் சொந்த ஊர் சென்றுள்ள நிலையில் சொத்து வரியை வருகிற 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும். சொத்து வரி வசூலை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீடிக்கின்ற நிலையில், “நிலுவையில் உள்ள மற்றும் இந்த ஆண்டிற்கான சொத்து வரியை உடனடியாக […]

பிரண்ட்ஸ் ஆப் போலிஸ் எனும் பிரிவை தடைவிதிக்க வேண்டும் – சீமான்

சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி […]

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 4,150 பேரில் சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 66,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி […]

சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் இந்த நோய் தொற்றால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33 வயதான நாகராஜன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்காக மதுரை சென்று வந்த, கோவை (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணனின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூன்று பேருக்கும் கடந்த வாரம் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மன் கே. அர்ச்சுணனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது […]