Category: Tamil Nadu

காஷ்மீரில் தமிழக வீரா் மரணம் – குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் திருமூர்த்தி (47). இவர் கடந்த 31 வருடங்களாக எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.காஷ்மீர் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது கடந்த 26-ம் தேதி இரவு துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அது வெடித்து, திருமூர்த்தியின் முகத்தில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது உடலில் பாய்ந்த குண்டு நீக்கப்பட்டது. […]

சென்னையில் சூதாட்டம் – நடிகர் ஷாம் உள்பட 12 பேர் கைது

சென்னையில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலானவர்கள் முடங்கியுள்ளனர். இந்தநிலையில், சென்னையில் கஞ்சா, சூதாட்டம் தங்கு தடையின்றி நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா பிரபலங்களும் பிசினஸ்மேன்களும் பணம் வைத்து சூதாடுவதாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்கு நேற்றிரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்து வேல்பாண்டி தலைமையில் […]

வேல் வரைந்து கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த சிறுமிகள்..

கருப்பர் கூட்டம்’ என்ற பெயரில் செயல்பட்ட யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து, கோவையில் சுவர்களில் வேல் வரைந்து சிறுமிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று […]

ஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் ‘ஈஷா’ அறக்கட்டளைக்கு அங்கீகாரம்

கோவை, ஈஷா அறக்கட்டளைக்கு, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு, அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும். ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஈஷா […]

இந்துக்களுக்கு எதிரான கருப்பர் கூட்டம் பின்னணியில் தி.மு.க

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, கருப்பர் கூட்டம் வெளியிட்ட, யு டியூப் வீடியோ விவகாரத்தில் கைதாகியுள்ள செந்தில்வாசன், தி.மு.க வின் தகவல் தொடர்பு பிரிவு நிர்வாகியாக இருக்கும்  என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், இந்துக்களின் மனம் புண்படும்படியாக, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப் பெருமானை போற்றி பாடும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது.இதற்கு, […]

‘கருப்பர் கூட்டத்தை’ கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்

கந்த சஷ்டி கவச பாடல் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது இந்துக்கள் மனம் புண்படுத்தி உள்ளது என கூறி இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தி கோவை வடவள்ளியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் 16 நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீடு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று  (23–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 16 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 5,137 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இத்திட்டங்களின் மூலம், சுமார் 6 ஆயிரத்து 555 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா […]

ராஜபாளையம், திமுக எம்.எல்.ஏ, தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. இதில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 நாட்களுக்கு முன், எம்.எல்.ஏ.,வின் […]

பாமகவில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் பாமகவில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் பாமக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் கல்லூர் கே. சி. வெங்கடாசலம் தலைமையில், பாஜக மாவட்ட தலைவர் தர்மலிங்கம் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனர், உடன் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன் வழக்குரைஞர் கேசவன், சென்னையன் […]

கருப்பர் கூட்டம் சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்

இந்துக்கடவுகளை இழிவுபடுத்தி வந்த ‘கருப்பர் கூட்டம்’ சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை இணைய தளத்தில் இருந்து  சைபர் கிரைம்  காவல்துறையினர் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். கடவுள் முருகனுக்கு உகந்த கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் என்ற சேனல் அமைப்பு. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கறுப்பர் கூட்டம் மீது ஏராளமான புகார்கள் பதியப்பட்டது. ஏற்கனவே இந்துமதத்தை இழிவுபடுத்தும் வகையில், பல்வேறு வீடியோக் […]