Category: Cricket

T20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.

ஆஸ்திரேலிய ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கவிருந்த T20 உலககோப்பைக் கிரிக்கெட் போட்டிகள், கொரோனா கொள்ளைநோய் பரவலின் காரணமாக தாமதமாகும். ஆஸ்திரேலிய பத்திரிக்கை இதுபற்றி எழுதும்போது கூடிய விரைவில் இந்த தள்ளிவைப்பு செய்தி வெளிவரும் என்று தெரிவித்திருக்கிறது.  கடந்த மாதம் உலக கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே T20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. 

வீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்

எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான ஏ அணியினரை அறிவித்துள்ளது. இந்த மூன்று அணியிலும் சூர்யக்குமார் யாதவ் இடம்பெறாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்வுக்குழு ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.