Category: Politics

இந்திய ராணுவத்தை அவமதிக்கிறார் ராகுல்: சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு

போபால்: இந்தியா மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே கடந்த வாரம் திங்கட்கிழமை கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளிவந்தன.  எனினும் இதுபற்றி சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய […]

பீகாரில் லாலு பிரசாத் கட்சியில் இருந்து ஆளுங்கட்சிக்கு தாவிய 5 மேலவை உறுப்பினர்கள்

பாட்னா: பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்துது வருகிறது.  அங்கு சட்டசபை மேலவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்பாளர்களாக குலாம் கவுஸ், குமுத் வர்மா மற்றும் பீஷ்ம ஷானி ஆகியோரது பெயர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் அங்கம் வகித்து வரும் 5 மேலவை உறுப்பினர்கள் […]

மதுரை : பாஜக பிரமுகர் வீட்டிற்கு சென்று தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ மூர்த்தி

மதுரை: மதுரை பாஜக இளைஞர் அணி நிர்வாகி வீட்டிற்கு திமுக எம். எல். ஏ மூர்த்தி சென்று தாக்க முயன்றதாக சி சி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை பாஜக இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளர் சங்கரபாண்டி ஊமச்சிகுளத்தில் வசிக்கிறார். அவரது வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம். எல். ஏ. மூர்த்தி, தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், ஊழல் செய்துள்ளதாக […]

சீனாவுடனான ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு

கல்வான் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததையடுத்து, சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர அரசு சீன நிறுவனங்களுடன் கையெழுத்திட்ட ரூ.5000 கோடி மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பால் சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ‘மேக்னடிக் மகாராஷ்டிரா 2.0 என்ற பெயரில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் சிங்கப்பூர், சீனா, […]

பணத்தை திருப்பி தராததால் பெண்ணை கடத்திய சம்பவம்: அமமுக நிர்வாகி கைது!

கமுதி: ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் போஸ் செல்வா 31. இவர் கமுதி பஸ் ஸ்டாண்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.இவருக்கு கமுதி வடமலை மகன் சூர்யாவிடம் 25, பழக்கம் ஏற்பட்டுள்ளது. சூர்யா ரயில்வேயில் உணவகம், டூவீலர் நிறுத்துமிட குத்தகை வாங்கி தருவதாக கூறி போஸ் செல்வாவிடம் 32 லட்ச ரூபாய் பெற்று உள்ளார். சூர்யா எந்த கான்ட்ராக்ட்டும் பெற்று தராததால், போஸ்செல்வா பணத்தை […]

திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா

தமிகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கக்கூடிய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. கடலூரில் நடந்த உறவினர் திருமண விழாவில் பங்கேற்று வந்த அவருக்கும், அவரது குடும்பத்தில் 3 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. அவர் முழுநலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வரவேண்டும் […]

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் நோய்த் தொற்று பரவலின் வேகம் குறைவில்லை. தமிழத்தில் நேற்று புதிதாக 2,141 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,373 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 70 ஆகவும் அதிகரித்து உள்ளது. இதேபோல் நேற்று […]

சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் ; மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

புதுடில்லி : சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை விடுத்து அதை புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. திடீரென லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சீன வீரர்கள் இந்திய படைகளின் மீது கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கினர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். […]

டில்லியில் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு

புதுடில்லி : ‘டில்லியில் உள்ள ஒவ்வொருவருக்கும், கொரோனா பரிசோதனை செய்வோம்’ என, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, சென்னை நகரங்களுக்கு அடுத்தபடியாக, தலைநகர் டில்லியில், கொரோனா வைரஸ் பரவல், அதி தீவிரமாக உள்ளது. குறிப்பாக, அரசில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், தொற்று ஏற்பட்டு கொண்டிருப்பதால், அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென்ற நிலை, உருவாகிஉள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, நேரிடையாக […]

உ.பி., 10.4 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி ; முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ : கொரோனாவால் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஊரடங்கால் வேலையின்றி சிக்கி தவித்த எண்ணற்ற தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, உத்தரபிரதேசத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு குறித்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். […]