Category: India

மகாராஷ்டிர அரசை கவிழ்த்து காட்டுங்கள் என உத்தவ் தாக்கரே சவால்

முடிந்தால் அரசை கவிழ்த்து காட்டுங்கள் என பாஜகவுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் உத்தவ் தாக்கரே கூறி இருப்பதாவது: இந்தியாவில் சீன நிறுவனங்கள் வர்த்தகம் செய்யலாமா என்பது குறித்து பிரதமர் மோடி கொள்கை முடிவை எடுக்க வேண்டும். ஆட்டோ ரிக்ஷா போன்றது எனது ஆட்சி. அதன் கைப்பிடி என்னிடம் இருக்கிறது. கூட்டணி கட்சிகள் […]

ஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் ‘ஈஷா’ அறக்கட்டளைக்கு அங்கீகாரம்

கோவை, ஈஷா அறக்கட்டளைக்கு, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு, அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும். ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஈஷா […]

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 430 கோடி ரூபாய் வருவாய்

நாடு முழுவதும் பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு உள்நாட்டு வெளிநாட்டுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் வேலைசெய்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனை அடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மத்திய அரசு ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் […]

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு செய்தார்

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், இன்று அயோத்தி சென்றார். இன்று மதியம் அயோத்தி வந்த யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலில் லஷ்மண், பாரத் மற்றும் ஷத்ருகன் சிலைகளை புதிய இடங்களில் அமைக்க நடத்தப்பட்ட பூஜையில் பங்கேற்றார். மேலும், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளையும் ஆதித்ய நாத் நேரில் ஆய்வு செய்தார். ராம ஜென்ம […]

பாலம் இல்லாததால் பாத்திரத்தில் வைத்து கர்ப்பிணிப்பெண் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவலம்!

சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரின் மாவட்டத்தில் உள்ள மினகபள்ளியில் வசிக்கும் ஹரிஷ் யலமின் கர்ப்பிணி மனைவி லட்சுமி என்பவர் மினூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரசவ வலி வரத்தொடங்கியுள்ளது. இதனை அடுத்து உறவினர்கள் ஒன்றினைந்து லட்சுமியை 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர், ஆனால் அவர்கள் அப்பகுதியில் கரைபுரண்டோடும் சிந்தாவாகு ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  இங்கு முறையான பாலம் இல்லாததால் […]

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி – தெலுங்கானா முதல்வர்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் நடந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், 39 வயதான ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவும் ஒருவர் ஆவார். இந்நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் […]

கொரோனா தடுப்பூசி – நவம்பர் மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கொரோனா தடுப்பூசியை ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவும், மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி […]

டெல்லியில் வீடு வீடாக சென்று ரேஷன் வழங்கப்படும் – முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லியில் வீடு வீடாக ரேஷன் வழங்கப்படும். டெல்லி அமைச்சரவை முதலமைச்சர் “கர் கர் ரேஷன்” திட்டத்தை (வீட்டுக்கு வீடு ரேஷன்) அனுமதித்துள்ளது. வீடு வீடாக ரேஷன் திட்டத்தை அமல்படுத்தும்போது, ​​வீட்டிற்கு நேரடியாக ரேஷன் கொண்டு செல்லப்படும். அதாவது, டெல்லி மக்கள் இனி ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ரேஷன் திட்டத்தின் டோர்ஸ்டெப் டெலிவரி மூலம் டெல்லியில் வசிக்கும் சுமார் 72 லட்சம் மக்கள் ஒவ்வொரு மாதமும் பயனடைவார்கள். இவர்கள் […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் – மே மாதங்களில் மட்டும் 206 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 206 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரோனா வைரசால் ஊரடங்கு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் மே மாதத்தில் தான் அதகளவில் தற்கெலை செய்து கொண்டுள்ளனர். அதே போல் அமரவாதி பகுதியை சேர்ந்த விவசாயிகள 2017-2019 ஆண்டுகளில் சுமார் 3,171 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சமூக ஆர்வலரான அபய் கோலர்கர் தாக்கல் செய்திருந்த தகவல்அறியும் […]

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்ட ஸ்வப்னா – என்ஐஏ அறிக்கை

கேரள தங்கக் கடத்தில் வழக்கின் குற்றவாளிகளான ஸ்வப்னா உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளனர்; பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்துள்ளனர்’ என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கேரளாவில் முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி, தங்கம் கடத்தப்படுவது, சமீபத்தில் […]