Category: India

எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவிப்பு

சீனாவுடனான எல்லை தகராறில் பல உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளன.சமீபத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஒ ஃபேர்ரல் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கரை சந்தித்தார். இது குறித்து பேசிய அவர் எல்லை கட்டுபாட்டு பகுதியில் சீனா ஒருதலைபட்சமான வகையில் செயல்படுவதை ஆஸ்திரேலியா ஒருபோதும் ஒப்பு கொள்ளாது எனவும், படைகளை விலக்கி கொண்டு சுமுகமான முறையில் பிரச்சினையை முடித்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

ஆந்திராவில் மதுவுடன் சானிடைசர் கலந்து குடித்த 10 பேர் பலி

ஆந்திராவில், மதுவுடன் சானிடைசர் கலந்து குடித்த 10 பேர் உயிரிழந்தனர். கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், சிலர் போதைக்காக மாற்றுவழிகளை தேடி வருகின்றனர்.ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் குரிசெடு கிராமத்தில் போதைக்காக, மதுவுடன் சிலர் சானிடைசரை கலந்து குடித்தனர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் பிச்சைக்காரர்கள் என தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் வழிக்கல்விக்காக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 50 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் – பஞ்சாப் அரசு

கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள பஞ்சாப் அரசு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் முற்றிலும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றன. ஆனால் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை […]

மாலை 3 மணியளவில் தாயகம் வரும் ரபேல் விமானங்கள்

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்திறன் போர் விமான ஒப்பந்தத்தில் ரஃபேல் விமானம் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல சிக்கல்கள் உருவாகின. விலை நிர்ணயம், அதிக விலை போன்ற காரணங்களால் இந்த ஒப்பந்தம் விமர்சனத்திற்கு ஆளானது. மேலும் கொரோனாவால் டெலிவரியில் தாமதம், ஒரு வழியாக இந்தியா நோக்கி புறப்பட்ட பின்னர், நேற்று அல் தாஃப்ரா தளம் அருகே ஈரானிய தாக்குதல் என பிரச்சினை.தற்போது அம்பாலா பகுதியில் வானிலை பிரச்சினை காரணமாக […]

ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள்

இந்தியா நோக்கி வரும் 5  புதிய ரபேல் விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் புதன் அன்று 5 விமானங்களும் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தப்ரா தளத்தில் 5 விமானங்களும் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக விமானப்படையும் உறுதி படுத்தியுள்ளது. இந்தியா வந்த பிறகு இந்த ஐந்து விமானங்களும் அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ள விழாவில் படையில் […]

மகாராஷ்டிர அரசை கவிழ்த்து காட்டுங்கள் என உத்தவ் தாக்கரே சவால்

முடிந்தால் அரசை கவிழ்த்து காட்டுங்கள் என பாஜகவுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் உத்தவ் தாக்கரே கூறி இருப்பதாவது: இந்தியாவில் சீன நிறுவனங்கள் வர்த்தகம் செய்யலாமா என்பது குறித்து பிரதமர் மோடி கொள்கை முடிவை எடுக்க வேண்டும். ஆட்டோ ரிக்ஷா போன்றது எனது ஆட்சி. அதன் கைப்பிடி என்னிடம் இருக்கிறது. கூட்டணி கட்சிகள் […]

ஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் ‘ஈஷா’ அறக்கட்டளைக்கு அங்கீகாரம்

கோவை, ஈஷா அறக்கட்டளைக்கு, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு, அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும். ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஈஷா […]

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 430 கோடி ரூபாய் வருவாய்

நாடு முழுவதும் பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு உள்நாட்டு வெளிநாட்டுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் வேலைசெய்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனை அடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மத்திய அரசு ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் […]

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு செய்தார்

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், இன்று அயோத்தி சென்றார். இன்று மதியம் அயோத்தி வந்த யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலில் லஷ்மண், பாரத் மற்றும் ஷத்ருகன் சிலைகளை புதிய இடங்களில் அமைக்க நடத்தப்பட்ட பூஜையில் பங்கேற்றார். மேலும், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளையும் ஆதித்ய நாத் நேரில் ஆய்வு செய்தார். ராம ஜென்ம […]

பாலம் இல்லாததால் பாத்திரத்தில் வைத்து கர்ப்பிணிப்பெண் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவலம்!

சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரின் மாவட்டத்தில் உள்ள மினகபள்ளியில் வசிக்கும் ஹரிஷ் யலமின் கர்ப்பிணி மனைவி லட்சுமி என்பவர் மினூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரசவ வலி வரத்தொடங்கியுள்ளது. இதனை அடுத்து உறவினர்கள் ஒன்றினைந்து லட்சுமியை 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர், ஆனால் அவர்கள் அப்பகுதியில் கரைபுரண்டோடும் சிந்தாவாகு ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  இங்கு முறையான பாலம் இல்லாததால் […]