Category: General

இந்தையாவை பின்பற்றி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகள் அமெரிக்காவிலும் தடை

அமெரிக்க மாநிலச் செயலாளர் மைக் பாம்பியோ விரைவில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். டிக் டாக் உடன் மேலும் சில சீன செயலிகளையும் தடை செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். பாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தபோது அவர் இச்செய்தியை வெளியிட்டார். சீன ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகள் அமெரிக்கர்களின் தனிநபர் தகவல்களை நோட்டம் விடுவதாகவும் திருடுவதும் அமெரிக்க அரசு கருதுகிறது. சீன கம்யூனிச அரசு […]

பத்து வருடங்களுக்கு பின்னர் அரசு பள்ளிகளில் கலைஞர் டிவி: திருச்சியில் பரபரப்பு!

தமிழகத்தில், 2006 – 11ல், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பொது மக்கள் அனைவருக்கும் இலவச கலர் ‘டிவி’க்கள் வழங்கப்பட்டன. இந்த, ‘டிவி’க்கள் தரம் இல்லாமல், சில ஆண்டுகளில் பழுதடைந்தன. இலவச கலர், ‘டிவி’ வழங்கும் திட்டத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படாமல், அந்தந்த மாவட்டங்களில் உள்ள குடோன்களில் பல ஆயிரம், ‘டிவி’க்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள குடோன்களில் பாதுகாக்கப்பட்ட, கலைஞர், ‘டிவி’க்கள், இரண்டு நாட்களாக, மாவட்டத்தில் […]

டிக்டோக் தடைக்குப் பிறகு சீன ஆதரவு தலைவர்களை கலாய்த்த நெட்டிசன்கள்

டிக்டோக் உட்பட்ட் 59 சீன செயலிகளை மத்திய அரசு தடைசெய்து உத்தரவிட்டது. அதன் பிறகு இந்த செயலிகள் இந்திய மண்ணில் இணையம் வழி எந்த செய்தியையும், தகவலையைம் எடுத்துச் செல்லமுடியாதபடி இணைய நிறுவனங்கள் தடைசெய்தன. இருந்தாலும் பல சீன ஆதரவு கட்சிகள், தலைவர்கள் இதனால் மனமுடையந்திருப்பது பல செய்திகள் வழி வெளிவந்துள்ளது. இதனை கலாய்த்து டிவிட்டரில் பல நெட்டிசன்கள் டிவிட் செய்திருந்தார்கள். டிக் டாக் தடையை தொடர்ந்து நலிவடைந்த டிக் […]

நாட்டின் ஏழை மக்கள் பசியால் வாடக்கூடாது, நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு

நியூடில்லி: நாடு முழுவதும் ஒருபுறம் கொரோனா அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் இந்தியா – சீனா எல்லை பதற்றம் இருக்கும் வேளையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களிடையே காணொளி மூலம் உரையாற்றினார். மோடி தனது உரையில், ‘சரியான நேரத்தில் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. அதே போல, கொரோனா மூலம் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியா […]

துபாயில் இந்திய தம்பதியை கத்தியால் குத்தி கொன்ற பாக்,திருடன் கைது

துபாய் : துபாய் நகரின் அரேபியன் ரேஞ்சஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹிரேன் ஆதித்யா-விதி ஆதித்யா தம்பதி. இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர்கள் சார்ஜாவில் வர்த்தகம் செய்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 13 வயது ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 18 ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த நபர், வீட்டிற்குள் திருட நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த ஹிரன் மற்றும் வித்தி, ஒருவர் […]

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்ஸிகோ:மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி, இரவு 10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ட்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் […]

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

பிரேசில்: உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 641 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50,617 ஆக உள்ளது.

இந்தியாவும் சீனாவும் கடினமான சூழலில் உள்ளன, உதவ முயற்சித்து வருகிறோம்: டிரம்ப்

வாஷிங்டன்: லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15 ஆம் தேதி இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு வீரர்களும் பரஸ்பரம் கடும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர்பலி ஏற்பட்டுள்ள்ளது. எனினும், சீன வீரர்கள் எத்தனை பேர் இந்த மோதலில்  பலியாகினர் என்ற துல்லிய தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.  கல்வான் பள்ளத்தாக்கு  மோதல் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் […]

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக லண்டனில் 14 வயது சிறுவன் கைது

லண்டனில் தீவிரவாத தாக்குதல் ஒன்றை நடத்த தயாராகி வந்த வெறும் 14 வயதுடைய சிறுவனை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். இங்கிலாந்து  ஹம்பர்ஷியர் மாகாணத்தில் உள்ள ஈஸ்ட்லி என்னும் இடத்தில் சிறுவன் கைதாகியுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகளோடு வீட்டில் இருந்தபடி தொடர்பில் இருந்த இந்த சிறுவன், லண்டனில் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டம் தீட்டி இருந்துள்ளான். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இவரை போலீசார் கைது செய்த போதும் […]