Category: General

சீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்

இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் 59% இந்தியர்கள் தற்போது நடக்கும் எல்லைப் பிரச்சனைக்காக சீனாவுடன் போர்புரிய வேண்டும் என பதிலளித்துள்ளனர். இந்திய சீனா எல்லை மோதல் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொடர்ந்து ஐந்து கட்டங்களாக கார்ப்ஸ் அளவிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.கிட்டத்தட்ட 60% இந்தியர்கள் போருக்கு ஆதரவாக இருந்தாலும் 34% பேர் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

ஆன்லைன் வழிக்கல்விக்காக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 50 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் – பஞ்சாப் அரசு

கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள பஞ்சாப் அரசு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் முற்றிலும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றன. ஆனால் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை […]

மாலை 3 மணியளவில் தாயகம் வரும் ரபேல் விமானங்கள்

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்திறன் போர் விமான ஒப்பந்தத்தில் ரஃபேல் விமானம் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல சிக்கல்கள் உருவாகின. விலை நிர்ணயம், அதிக விலை போன்ற காரணங்களால் இந்த ஒப்பந்தம் விமர்சனத்திற்கு ஆளானது. மேலும் கொரோனாவால் டெலிவரியில் தாமதம், ஒரு வழியாக இந்தியா நோக்கி புறப்பட்ட பின்னர், நேற்று அல் தாஃப்ரா தளம் அருகே ஈரானிய தாக்குதல் என பிரச்சினை.தற்போது அம்பாலா பகுதியில் வானிலை பிரச்சினை காரணமாக […]

ஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் ‘ஈஷா’ அறக்கட்டளைக்கு அங்கீகாரம்

கோவை, ஈஷா அறக்கட்டளைக்கு, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு, அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும். ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஈஷா […]

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 430 கோடி ரூபாய் வருவாய்

நாடு முழுவதும் பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு உள்நாட்டு வெளிநாட்டுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் வேலைசெய்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனை அடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மத்திய அரசு ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் […]

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு செய்தார்

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், இன்று அயோத்தி சென்றார். இன்று மதியம் அயோத்தி வந்த யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலில் லஷ்மண், பாரத் மற்றும் ஷத்ருகன் சிலைகளை புதிய இடங்களில் அமைக்க நடத்தப்பட்ட பூஜையில் பங்கேற்றார். மேலும், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளையும் ஆதித்ய நாத் நேரில் ஆய்வு செய்தார். ராம ஜென்ம […]

‘கருப்பர் கூட்டத்தை’ கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்

கந்த சஷ்டி கவச பாடல் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது இந்துக்கள் மனம் புண்படுத்தி உள்ளது என கூறி இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தி கோவை வடவள்ளியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

டெல்லியில் வீடு வீடாக சென்று ரேஷன் வழங்கப்படும் – முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லியில் வீடு வீடாக ரேஷன் வழங்கப்படும். டெல்லி அமைச்சரவை முதலமைச்சர் “கர் கர் ரேஷன்” திட்டத்தை (வீட்டுக்கு வீடு ரேஷன்) அனுமதித்துள்ளது. வீடு வீடாக ரேஷன் திட்டத்தை அமல்படுத்தும்போது, ​​வீட்டிற்கு நேரடியாக ரேஷன் கொண்டு செல்லப்படும். அதாவது, டெல்லி மக்கள் இனி ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ரேஷன் திட்டத்தின் டோர்ஸ்டெப் டெலிவரி மூலம் டெல்லியில் வசிக்கும் சுமார் 72 லட்சம் மக்கள் ஒவ்வொரு மாதமும் பயனடைவார்கள். இவர்கள் […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் – மே மாதங்களில் மட்டும் 206 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 206 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரோனா வைரசால் ஊரடங்கு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் மே மாதத்தில் தான் அதகளவில் தற்கெலை செய்து கொண்டுள்ளனர். அதே போல் அமரவாதி பகுதியை சேர்ந்த விவசாயிகள 2017-2019 ஆண்டுகளில் சுமார் 3,171 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சமூக ஆர்வலரான அபய் கோலர்கர் தாக்கல் செய்திருந்த தகவல்அறியும் […]

வங்கி மோசடி நீரவ் மோடியின் ரூ330கோடி சொத்துக்கள் பறிமுதல்

வெளிநாடு தப்பியோடிய மோசடி வைர வியாபாரியான நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்களை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பினர். ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிரவ் […]