Category: Exclusive

துபாயில் இந்திய தம்பதியை கத்தியால் குத்தி கொன்ற பாக்,திருடன் கைது

துபாய் : துபாய் நகரின் அரேபியன் ரேஞ்சஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹிரேன் ஆதித்யா-விதி ஆதித்யா தம்பதி. இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர்கள் சார்ஜாவில் வர்த்தகம் செய்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 13 வயது ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 18 ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த நபர், வீட்டிற்குள் திருட நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த ஹிரன் மற்றும் வித்தி, ஒருவர் […]

ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி

சென்னை: லடாக் இந்திய – சீன ராணுவ மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15ம் தேதி இரவு சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சீனா ராணுவம் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் தமிழகத்தின் […]

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் நோய்த் தொற்று பரவலின் வேகம் குறைவில்லை. தமிழத்தில் நேற்று புதிதாக 2,141 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,373 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 70 ஆகவும் அதிகரித்து உள்ளது. இதேபோல் நேற்று […]

இலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு

சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இவையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலோடுதான் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் போராட்டம் என்று திசை திருப்புவது ஏற்கத்தக்கதல்ல.இந்தச் சட்டத்தில் எங்கும் இஸ்லாம் என்றோ முஸ்லிம் என்றோ குறிப்பிடப்படவில்லை. வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகள்தான் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன.

ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது

மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ்கூட்டனி 47 தொகுதிகளைப் பிடித்து வெற்றிபெற்றிருக்கிறது. தொடர்ந்து தன்னுடைய மாநிலங்களை இழந்துவரும் பாஜக கடந்தமுறையைவிட தற்பொழுது 12 தொகுதிகளை இழந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை

தமிழக பள்ளிகளில் கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில், அந்த தேர்வுகள் இன்றோடு முடிவடைந்தது. இதையடுத்து அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் என அனைத்துக்கும் சேர்த்து நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு கோடி தமிழக வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வரைவு வாக்களர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 6 கோடியே 1,329 என தெரிவித்துள்ளது.