Category: Editorial

கோவையில் இ-பாஸ் இன்றி ஊழியர்களை பணியமர்த்திய நகை கடைக்கு சீல் வைப்பு

கோவை: இ-பாஸ் பெறாமல், சென்னையிலிருந்து கோவைக்கு ஊழியர்களை அழைத்துவந்து, தனிமைப்படுத்தாமல் நேரடியாக பணியமர்த்திய தனியார் நகை கடைக்கு வருவாய்த்துறையினர், ‘சீல்’ வைத்தனர். கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில், பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் சென்னை கிளையிலிருந்து, 30 ஊழியர்களை இ-பாஸ் இல்லாமல் அழைத்து வந்து பணியமர்த்தியுள்ளதாக, சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இன்று (ஜூன் 20) அந்த நகைக் கடையில் சோதனையிட்டனர். அப்போது, […]

கொரோனா பாதிப்பு : உண்மையான தகவலை தமிழக அரசு பகிரவில்லை – நடிகர் கமல்ஹாசன்

சென்னை: பரவலான பரிசோதனை செய்யப்படாததே பொது முடக்கத்திற்கும் பொருளாதார முடக்கத்திற்கும் காரணம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து வென்று எடுப்பதற்கு உண்மையான தகவல்களை தமிழக அரசு பகிரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெளிப்படை தன்மையின்றி செயல்பட்டதே ஊரடங்கிற்குள் ஊரடங்கு என்ற நிலை ஏற்பட காரணம் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இரண்டாம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்வு; ஷாப்பிங் மால், ஓட்டல்கள் திறப்பு

சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, சிங்கப்பூரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், இரண்டாம் கட்டமாக மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. நேற்று(ஜூன் 19), ஷாப்பிங் மால், ஓட்டல்கள், சலுான்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், பல இடங்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. மக்கள், முக கவசம் அணிந்திருந்தனர். சமூக விலகல் நடைமுறையையும் பின்பற்றினர்.

மதுரையில் ஒரேநாளில் 104பேருக்கு கொரோனா

மதுரை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் நேற்று முதல் […]

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; 6 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த மாத இறுதியிலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயல்வதும், இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொது மக்களை தாக்குவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு இந்திய தரப்பில் உடனுக்குடன் தக்க பதிலடி […]

371 சீன பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு, மத்திய அரசு திட்டம்

புதுடில்லி: ரூ.9.50 லட்சம் கோடி மதிப்பிலான, 371 சீன பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய – சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். […]

சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ 471 கோடி ஒப்பந்தம் ரத்து

புதுடில்லி: இந்தியாவில் கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே ரயில் பாதையில் சிக்னல் தொலைத் தொடர்பு பணிகளைச் செய்ய சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா, மேற்கு வங்கத்தின் தங்குனி இடையே சரக்குப் போக்குவரத்திற்கென்றே தனி ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் உ.பி., கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே 417 கி.மீ., தூரத்திற்கு சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பணிகளைச் செய்யும் ஒப்பந்தம் ஒன்று […]

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தார். இதனைத்தொடந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என தெரியவந்தது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மிரட்டல் […]

டில்லியில் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு

புதுடில்லி : ‘டில்லியில் உள்ள ஒவ்வொருவருக்கும், கொரோனா பரிசோதனை செய்வோம்’ என, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, சென்னை நகரங்களுக்கு அடுத்தபடியாக, தலைநகர் டில்லியில், கொரோனா வைரஸ் பரவல், அதி தீவிரமாக உள்ளது. குறிப்பாக, அரசில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், தொற்று ஏற்பட்டு கொண்டிருப்பதால், அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென்ற நிலை, உருவாகிஉள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, நேரிடையாக […]

உ.பி., 10.4 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி ; முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ : கொரோனாவால் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஊரடங்கால் வேலையின்றி சிக்கி தவித்த எண்ணற்ற தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, உத்தரபிரதேசத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு குறித்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். […]