Category: Editorial

ஒரு மாதத்தில், அரசு பங்களாவை காலி செய்ய பிரியங்காவிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

புதுடில்லி: டில்லியில் உள்ள அரசு பங்களாவை வரும் ஆக.1ம் தேதிக்குள் காலி செய்யுமாறு, காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு முதல் டில்லி வி.ஐ.பி., பகுதியில் உள்ள அரசு பங்களாவில் பிரியங்கா, தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருக்கும் தனிநபர் என்பதால் பிரியங்காவுக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கான வாடகையாக 700 ரூபாயை அவர் செலுத்தி வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு சோனியா, […]

ஈரான்: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – 19 பேர் பலி

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகில் தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் […]

பீஹாரில், புதுமாப்பிளை கொரோனாவால் மரணம், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா

பாட்னா: பீஹாரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் கொரோனா அறிகுறியுடன் இருந்த புது மாப்பிள்ளை உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் ஜூன் 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை மரணமடைந்தார். அவருடைய பிரேதத்தை பரிசோதனை செய்ததில் […]

பூட்டானில் நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறது சீனா: தொடரும் அத்துமீறல்

திம்பு: தென் சீனக் கடலில் இருந்து லடாக் வரை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இப்போது பூட்டானில் உள்ள ஒரு புதிய நிலத்திற்கு உரிமை கோரியுள்ளது. உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின் 58 வது கூட்டத்தில், பூட்டானில் உள்ள சாகடெங் வனவிலங்கு (Sakteng Wildlife Sanctuary) சரணாலயத்தின் நிலம் “சர்ச்சைக்குரியது” என்று சீனா விவரித்தது. இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை எதிர்க்க முயன்றது. சீனாவின் நடவடிக்கையை  கடுமையாக எதிர்த்ததுடன், இந்த நிலம் எங்கள் நாட்டுடன் […]

சீனாவின் படைகுவிப்பை தொடர்ந்து இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை லடாக் எல்லையில் நிறுத்துகிறது

புதுடெல்லி: லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்தனர். இது தொடர்பாக இரு நாட்டு ராணு வ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு […]

மனதின் குரல் – மோடிஜி

பிரதமர் மோடி அவர்களின் மனதில் குரல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்துவதாக அமைந்துள்ளது. இதில் அவர் அரசியல் தவிர்த்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொதுவான பல விடயங்களையும், அறிவுருத்தல்களையும் அளித்துவருகிறார்.

பாகிஸ்தான் பங்குச் சந்தையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு :10 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தான், கராச்சியில் உள்ள பங்குச் சந்தை கட்டிடத்தை தாக்க முயன்ற 4 துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள்களை பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில், 4 பாதுகாப்பு வீரர்கள், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உள்பட 10 இறந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர் என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தாக்குதலில் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகளிடம் இருந்து […]

வங்காள தேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 23 பேர் பலி

வங்கதேசத்தில் படகுடன் மோதி மற்றொரு படகு, ஆற்றில் மூழ்கியதில் 23 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் டாக்கா நகரில் உள்ள புரிகங்கா நதியில், ஆட்களை ஏற்றிகொண்டு சென்ற படகு ஒன்று, மற்றொரு படகுடன் மோதி கவிழ்ந்தது. தகவலறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 23 பேரது சடலங்கள் மீட்கப்பட்டன, தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த படகில் 50 க்கும் மேற்பட்ட […]

ஆப்கானிஸ்தான், கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் மனித உரிமைகள் அமைப்பினர் 2 பேர் பலி

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுல் நகரில் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் பயணம் செய்த காரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அதில் பயணம் செய்த மனித உரிமைகள் அமைப்பினர் இரண்டு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், ஊழியர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு மனித […]

திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கக்கூடிய நிலையில், செய்யூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. கட்சியின் 3வது எம்.எல்.ஏ ஆவார், ஏற்கனவே தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் உயிரிழந்த நிலையில், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல். ஏவான வசந்தம் கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வந்தார். […]