Category: Culture

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தினால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் சில மாற்றங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் ஆகஸ்டு மாதம் 5-ம் தேதியன்று ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்ளும் இந்நிகழ்ச்சியில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அணைத்தும் […]

ரக்ஷாபந்தன், 4000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் சீனா.!

நாடு முழுவதும் சீன பொருள்களை புறக்கணிக்கும்  முயற்சிகள் தொடங்கிவிட்ட நிலையில், அதன் அடுத்தகட்டமாக இந்தியா ஒரு படி மேலே சென்றுவிட்டது. மேக்  இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே பொருட்களை தயாரித்து தன்னிறைவு பெற வேண்டும் என்ற இலக்கின் முதல் கட்டம் இப்போது நிறைவேறுகிறது.  இந்தியாவின் இந்த செயல்பாடு, ஒருபுறம் சீனாவுக்கு பொருளாதார ரீதியாக நட்டத்தை ஏற்படுத்தினால், மறுபுறம் நம் நாட்டில் லாக்டவுனால் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.  […]

குன்னூரில் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை தொழிலாளர்கள் போராட்டம்

குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசுவதற்குத் தடைவிதித்ததைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு, பொது மேலாளராக சஞ்சய் வக்லு உள்ளார். அவரை, தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது, நிர்வாகிகள் தமிழில் பேசினர். ஆனால், சஞ்சய் வக்லு, நிர்வாகிகள் தமிழில் பேசக்கூடாது. ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் பேச வேண்டும். […]

“கறுப்பர் கூட்டம்” சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண்

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மீது பாஜக சார்பில், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். புதுச்சேரியில் சரண் அடைந்துள்ள சுரேந்திரனை  சென்னை அழைத்து வர தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர். முன்னதாக மத்திய […]

ராமர் குறித்த பிரதமரின் கருத்து அரசியல் சார்ந்தது இல்லை – நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கடவுள் ராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல என்றும் நேபாள நாட்டில் பிறந்தவர் என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் தெரிவித்திருந்தார். அயோத்தி என்பது நேபாளத்தில் பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். அங்குதான் ராமர் பிறந்தார் என அவர் கூறினார். […]

“சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துகோன் குருபூஜையும் வாக்குவங்கி அரசியலும்”

கொரோனா வந்தாலும் யாதவ சமுதாயத்தை திருப்திபடுத்திய “திராவிட கட்சிகள்”.!அரசியல் விமர்சகனாய் எனது பார்வை… // இந்தா ரெண்டு சீட்டு “எடுத்துக்கோ” என்ற பிச்சை  இம்முறை யாதவர்களிடம் எடுபடாது. தேசிய அளவில் வழுவாக உள்ள யாதவர்களை தமிழகம் மட்டும் புறக்கணிப்பதா..? என கொந்தளிக்கும் யாதவ இளைஞர் கூட்டமைப்பு. திரைமறைவில் ஆலோசிக்கும் யாதவ இளைஞர்கள்.கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் புறக்கணிக்கபட்ட சமுதாயமாக  இருந்த யாதவ சமுதாயத்தை நோக்கி ஒரு “வாக்கு வங்கி” அரசியலை தமிழக […]

தாய் நாட்டிற்காக உயிர்நீத்த மாவீரன் அழகுமுத்துக்கோனை நினைவுகூர்ந்து வணங்கி போற்றுவோம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வீரம் என்ற சொல்லுக்கு அர்த்தமாக என்றும் விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்கள் நமது தாய்நாட்டிற்காக உயிர்நீத்த தினம் இன்று. அந்த மகத்தான தியாகியை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கி போற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

கொரோனா பாதிப்பால் அமர்நாத் யாத்திரைக்கு தினமும் 500 பேருக்கு மட்டுமே அனுமதி!! யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம்

கொரோனா பாதிப்பு காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 21-ம்தேதி முதல்  அமர்நாத் யாத்திரை தொடங்கப்படவுள்ளது.  இதையொட்டி, நாடாளுமன்றத்தின் வடக்கு கட்டிட பகுதியில்  உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில்  அமர்நாத் யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற […]

பாகிஸ்தான்: ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஹிந்து கோவிலின் கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு அங்கு எதிர்ப்பு எழுந்த போதும், கட்டுமான பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அமர் பரூக் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாகிஸ்தான் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா காலித் மெக்மூத் கான் […]

தாஜ்மஹால் திறப்பு இல்லை: ஆக்ராவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் நடவடிக்கை

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில், இன்று முதல் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது, ஆனால் ஆக்ராவில் நோய்த்தொற்று காரணமாக 71 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால், தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை உள்ளிட்ட […]