Category: Culture

கொரோனா பாதிப்பால் அமர்நாத் யாத்திரைக்கு தினமும் 500 பேருக்கு மட்டுமே அனுமதி!! யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம்

கொரோனா பாதிப்பு காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 21-ம்தேதி முதல்  அமர்நாத் யாத்திரை தொடங்கப்படவுள்ளது.  இதையொட்டி, நாடாளுமன்றத்தின் வடக்கு கட்டிட பகுதியில்  உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில்  அமர்நாத் யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற […]

பாகிஸ்தான்: ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஹிந்து கோவிலின் கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு அங்கு எதிர்ப்பு எழுந்த போதும், கட்டுமான பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அமர் பரூக் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாகிஸ்தான் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா காலித் மெக்மூத் கான் […]

தாஜ்மஹால் திறப்பு இல்லை: ஆக்ராவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் நடவடிக்கை

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில், இன்று முதல் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது, ஆனால் ஆக்ராவில் நோய்த்தொற்று காரணமாக 71 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால், தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை உள்ளிட்ட […]

ஐநா சபை தொடங்கி லடாக் வரை, தமிழை மேற்கோள் காட்டும் பிரதமர் மோடி ..

ஒரு மொழிக்கு பெருமை தருவதே அதனுடைய இலக்கண இலக்கிய காப்பியங்கள் தான். அவை இந்த உலகிற்கு எதை எடுத்து சொல்லி உள்ளது என்பதை ஆராய்ந்தாலே அந்த மொழி பேசும் இன மக்களின் மேன்மையை அறிந்து கொள்ள முடியும்! அந்த வகையில் இந்த உலகில் மூத்தகுடி தமிழர்கள் எனவும், அவர்களின் பண்டைய வாழ்வியல் உயர்ந்தது என்பதனையும் பாரதத்திற்கு மட்டுமல்லாமல் உலகிற்கு  மெய்பிக்கும் வகையில் பிரதமர் இக்கட்டான பல நேரங்களில் மேற்கோள் காட்டி […]

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்

அயோத்தி: உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது.இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை, கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அமைத்தது. மார்ச்சில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. கட்டுமான பணிகள், மே இறுதியில் துவங்கின. இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட, அயோத்திக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சென்றார். அப்போது அவர் ராமஜென்மபூமி […]

தமிழகத்தில் தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5000 பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ் கலப்படமில்லாத தூய தனி மொழி. உலக முதல் தாய்மொழியின் 80 சதவீத சொற்கள் இன்றைய தமிழில் உள்ளன. சங்க காலத்திற்கு முந்தைய தமிழில் 100 சதவீத சொற்கள் முதல் தாய்மொழி சொற்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தமிழ் மொழியை வளர்ப்பதிலும், புதிய சொற்களைக் கண்டறிவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நடைமுறை வாழ்க்கையில் கலப்புச் சொற்கள் […]

முதல் முறையாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடி செலவில் இந்து கோயில்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடியில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் கட்டப்படுகிறது. இக்கோயில் கட்டுமானத்திற்கு ரூ.10 கோடி செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நேற்று (புதன்கிழமை) இஸ்லாமாபாத்தின் எச்-9 பகுதியில் 20,000 சதுர யார்டுகளில் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மல்ஹி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மல்ஹி, ‘‘கடந்த 1947-ம் ஆண்டுக்கு முன் இஸ்லாமாபாத்திலும் […]