Category: Crime

பஹ்ரைனில் மருத்துவர்களுக்கு கொரோனாவை பரப்ப முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை

பஹ்ரைனில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலாகவே உள்ளது. தொற்று பாதிப்புகளை குறைக்க பஹ்ரைன் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதித்த நோயாளி ஒருவர், தனது முக கவசத்தை வேண்டுமென்றே கழற்றிவிட்டு, மருத்துவ ஊழியர்களுக்கு முன் இருமியதால் அவருக்கு விதிமீறலின் அடிப்படையில் அபராதத்துடன் (BD 1,000) 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரதுறை கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தொற்று பரிசோதிக்கப்பட்ட […]

சென்னையில் சூதாட்டம் – நடிகர் ஷாம் உள்பட 12 பேர் கைது

சென்னையில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலானவர்கள் முடங்கியுள்ளனர். இந்தநிலையில், சென்னையில் கஞ்சா, சூதாட்டம் தங்கு தடையின்றி நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா பிரபலங்களும் பிசினஸ்மேன்களும் பணம் வைத்து சூதாடுவதாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்கு நேற்றிரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்து வேல்பாண்டி தலைமையில் […]

இந்துக்களுக்கு எதிரான கருப்பர் கூட்டம் பின்னணியில் தி.மு.க

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, கருப்பர் கூட்டம் வெளியிட்ட, யு டியூப் வீடியோ விவகாரத்தில் கைதாகியுள்ள செந்தில்வாசன், தி.மு.க வின் தகவல் தொடர்பு பிரிவு நிர்வாகியாக இருக்கும்  என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், இந்துக்களின் மனம் புண்படும்படியாக, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப் பெருமானை போற்றி பாடும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது.இதற்கு, […]

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்ட ஸ்வப்னா – என்ஐஏ அறிக்கை

கேரள தங்கக் கடத்தில் வழக்கின் குற்றவாளிகளான ஸ்வப்னா உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளனர்; பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்துள்ளனர்’ என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கேரளாவில் முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி, தங்கம் கடத்தப்படுவது, சமீபத்தில் […]

பிளாஸ்மா தானம் செய்வதாக பணம் பறித்த மோசடி செய்த இளைஞர்

கொரோனா வைரஸ் தாக்கி அபாய கட்டத்தில் இருப்பவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது போன்ற தேவையிருப்பவர்களை தொடர்பு கொண்டு பிளாஸ்மா தானம் செய்வதாக பணம் பெற்றுக்கொண்டு இளைஞர் ஒருவர் ஏமாற்றியுள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொரோனா பிரச்னையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளார். இது போன்ற மோசடி முதல் முறையாக நடந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து மீண்ட நபர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தத்தை செலுத்துவது பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது. […]

கருப்பர் கூட்டம் சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்

இந்துக்கடவுகளை இழிவுபடுத்தி வந்த ‘கருப்பர் கூட்டம்’ சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை இணைய தளத்தில் இருந்து  சைபர் கிரைம்  காவல்துறையினர் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். கடவுள் முருகனுக்கு உகந்த கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் என்ற சேனல் அமைப்பு. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கறுப்பர் கூட்டம் மீது ஏராளமான புகார்கள் பதியப்பட்டது. ஏற்கனவே இந்துமதத்தை இழிவுபடுத்தும் வகையில், பல்வேறு வீடியோக் […]

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: துபாயில் பைசல் பரீத் கைது

கேரளா தங்க கடத்தல் வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் பைசல் பரீத் ஏன்பவர் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியது தெரிய வந்தது.  இது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு […]

இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்ற பிரிட்டன் எம்.பி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணம் மேற்கொள்ளவும், இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரகாம்ஸ், பாகிஸ்தான் அரசிடம் இருந்து பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. மத்திய அரசு கடந்தாண்டு ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி […]

“கறுப்பர் கூட்டம்” சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண்

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மீது பாஜக சார்பில், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். புதுச்சேரியில் சரண் அடைந்துள்ள சுரேந்திரனை  சென்னை அழைத்து வர தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர். முன்னதாக மத்திய […]

கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு தடை; பாஜக புகார்

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:நாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் நடத்தி வருகின்றனர். அதில், ஆபாச புராணம் என்ற பெயரில் கந்தசஷ்டி கவசத்தை […]