Category: Cover Stories

நாட்டின் ஏழை மக்கள் பசியால் வாடக்கூடாது, நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு

நியூடில்லி: நாடு முழுவதும் ஒருபுறம் கொரோனா அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் இந்தியா – சீனா எல்லை பதற்றம் இருக்கும் வேளையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களிடையே காணொளி மூலம் உரையாற்றினார். மோடி தனது உரையில், ‘சரியான நேரத்தில் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. அதே போல, கொரோனா மூலம் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியா […]

இந்திய-பூடான் நீர்மின்திட்டம் துவக்கம்!

இந்தியா – பூடான் இடையே, 600 மெகா வாட் திறனுள்ள புதிய நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது. பூடானின் டிரசியாங்ஸ்தே மாவட்டத்தில், கொலேன்சுலு ஆற்றின் நீரைப் பயன்படுத்தி, 600 மெகா வாட் திறனுள்ள நீர் மின் திட்டத்தை துவக்க, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இதற்கான முறையான ஒப்பந்தம், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பூடான் வெளியுறவு அமைச்சர் டாண்டி டோர்ஜி ஆகியோர் முன்நிலையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ […]

சோதனைச் சாவடியில் லாரி மோதி காவலர் பரிதாப பலி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சென்னிமலை சாலையிலுள்ள திட்டுப்பாறையில் கொரோனா பரவல் தடுப்பிற்காக காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடி கண்காணிப்பு பணியில் ஆயுதப்படை காவலர் பிரபு (23) , தலைமை காவலர் மற்றும் மருத்துவ குழுவினர் ஈடுபட்டிருந்தினர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடியில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் வந்துள்ளது. இதுகுறித்த தகவல் திட்டுப்பாறை சோதனை […]

சீனாவின் படைகுவிப்பை தொடர்ந்து இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை லடாக் எல்லையில் நிறுத்துகிறது

புதுடெல்லி: லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்தனர். இது தொடர்பாக இரு நாட்டு ராணு வ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு […]

சீனாவில், கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக பரவ வாய்ப்புள்ள காய்ச்சல்: சீனாவில் பன்றிகளிடையே பரவல்

சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலிலிருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதிய காய்ச்சல் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். 2019 டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதுவரை 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 […]

உய்கூர் முஸ்லிம் பெண்களுக்கு சீனாவில் கட்டாய கருத்தடை

பெய்ஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் மொழி பேசுவோர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் உய்கர் முஸ்லிம்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள், சீனாவில் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர் உய்கூர் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவா்களுக்கு தண்டனைகள் அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. உய்கூர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடா்ந்து பிரச்னை எழுவது போன்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை சீன […]

ஆப்கானிஸ்தான்: பரபரப்பான சந்தைப்பகுதியில் தாலிபான் பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் – 23 பேர் பலி

காபுல்: ஆப்கானிஸ்தானின்  ஹெல்மெண்ட் மாகாணம் சங்கின் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பகுதியில் இன்று வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று திடீரென வெடித்துச்சிதறியது.இந்த குண்டுவெடிப்பு தாக்குதலைத்தொடர்ந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் சந்தைப்பகுதியில் இருந்த அப்பாவி பொதுமக்கள் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். சந்தைப்பகுதியில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் தான் நிகழ்த்தியுள்ளதாக் ஆப்கானிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மனதின் குரல் – மோடிஜி

பிரதமர் மோடி அவர்களின் மனதில் குரல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்துவதாக அமைந்துள்ளது. இதில் அவர் அரசியல் தவிர்த்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொதுவான பல விடயங்களையும், அறிவுருத்தல்களையும் அளித்துவருகிறார்.

பாட்னாவில் பெரிய பாலம் கட்டுவதற்காக சீன நிறுவனங்களுடன் செய்த ரூ.2,900 கோடி ஒப்பந்தம் ரத்து: பீகார்முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி

பீகார் தலைநகர் பாட்னாவில் பெரிய பாலம் கட்டுவதற்காக சீனா நிறுவனத்துடனான ரூபாய். 2,900 கோடி ஒப்பந்தத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. கடந்த 16ஆம் தேதி இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா-சீனா இடையே பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. பின்னர் இந்தியாவில் உள்ள பல இடங்களில் சீனாவை கண்டித்தும் மற்றும் பொருட்களை தவிர்ப்பதற்கு பெரும் ஆர்ப்பாட்டம் […]

இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்ட முன்னாள் தி.மு.க. எம்பி. அர்ஜுனன்

சேலம்: நாளுக்கு நாள் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், குறிப்பாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஊரடங்கு விதி கடுமையாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது வாகன போக்குவரத்துக்கு மண்டல முறை அமலில் உள்ளதால், மண்டலங்களின் பிற மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும், மக்களின் பயணங்களை இதனால் தடுக்க இயலவில்லை என்றும், எனவே, வாகன […]