Category: Cover Stories

காஷ்மீரில் தமிழக வீரா் மரணம் – குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் திருமூர்த்தி (47). இவர் கடந்த 31 வருடங்களாக எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.காஷ்மீர் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது கடந்த 26-ம் தேதி இரவு துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அது வெடித்து, திருமூர்த்தியின் முகத்தில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது உடலில் பாய்ந்த குண்டு நீக்கப்பட்டது. […]

காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவல் முறியடிப்பு-ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன

காஷ்மீரின் எல்லைக்கோடு பகுதியின் அருகே மச்சில் செக்டார் பகுதியியில் பயங்கரவாத ஊடுருவலை இராணுவ வீரர்கள் முறியடித்துள்ளனர். குப்வாரா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்திய எல்லைக்குள் 600மீ தொலைவில் சந்தேகத்திற்கு உரிய நடமாட்டம் இருப்பதை இராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர். பயங்கரவாதிகளை வீரர்கள் வழிமறித்த பின்பு சண்டை தொடங்கியுள்ளது.அதிகாலை மூன்று மணிக்கு இந்த சண்டை நடந்துள்ளது.சண்டையை தொடர்ந்து விடிந்ததும் வீரர்கள் அந்த பகுதியில் பயங்கரவாதிகளை தேடியுள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் இரத்தத்துடன் மூன்று […]

உத்தராகண்ட் மாநில எல்லை பகுதியில் படைகளை குவிக்கும் சீன ராணுவம்

சீன ராணுவம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலெக் பகுதியில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் சீன ராணுவம் ஒரு பட்டாலியன் அளவிலான வீரர்களை குவித்துள்ளது.கடந்த சில நாட்களாக சீன படையினரின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிக்கு அப்பால் லிபுலெக், வடக்கு சிக்கீம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் சீன படைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறினார். […]

எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவிப்பு

சீனாவுடனான எல்லை தகராறில் பல உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளன.சமீபத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஒ ஃபேர்ரல் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கரை சந்தித்தார். இது குறித்து பேசிய அவர் எல்லை கட்டுபாட்டு பகுதியில் சீனா ஒருதலைபட்சமான வகையில் செயல்படுவதை ஆஸ்திரேலியா ஒருபோதும் ஒப்பு கொள்ளாது எனவும், படைகளை விலக்கி கொண்டு சுமுகமான முறையில் பிரச்சினையை முடித்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

ஆந்திராவில் மதுவுடன் சானிடைசர் கலந்து குடித்த 10 பேர் பலி

ஆந்திராவில், மதுவுடன் சானிடைசர் கலந்து குடித்த 10 பேர் உயிரிழந்தனர். கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், சிலர் போதைக்காக மாற்றுவழிகளை தேடி வருகின்றனர்.ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் குரிசெடு கிராமத்தில் போதைக்காக, மதுவுடன் சிலர் சானிடைசரை கலந்து குடித்தனர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் பிச்சைக்காரர்கள் என தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை 3 மணியளவில் தாயகம் வரும் ரபேல் விமானங்கள்

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்திறன் போர் விமான ஒப்பந்தத்தில் ரஃபேல் விமானம் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல சிக்கல்கள் உருவாகின. விலை நிர்ணயம், அதிக விலை போன்ற காரணங்களால் இந்த ஒப்பந்தம் விமர்சனத்திற்கு ஆளானது. மேலும் கொரோனாவால் டெலிவரியில் தாமதம், ஒரு வழியாக இந்தியா நோக்கி புறப்பட்ட பின்னர், நேற்று அல் தாஃப்ரா தளம் அருகே ஈரானிய தாக்குதல் என பிரச்சினை.தற்போது அம்பாலா பகுதியில் வானிலை பிரச்சினை காரணமாக […]

ஷாங்காய் நகருக்கு அருகே பறந்த அமெரிக்க கடற்படை விமானங்கள்

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி8 மற்றும் இ.பி-3இ விமானங்கள் சீன நிலபரப்புக்கு மிக அருகே பறந்துள்ள நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானங்கள் தைவான் ஜலஸந்தி வழியாக பறந்து, ஃபூஜியான் மற்றும் ஷெய்ஜாங் ஆகிய கடலோர பகுதிகளுக்கு மிக அருகே பறந்துள்ளன. அமெரிக்க பி8 விமானம் ஷாங்காய் நகரிலிருந்து வெறுமனே 76கிலோமீட்டர் தொலைவில் பறந்துள்ளது, மேலும் மற்றோரு விமானம் ஃபூஜியான் கடற்கரை பகுதியில் இருந்து வெறுமனே 106கிலோமீட்டர் […]

பாகிஸ்தானில் சீக்கியர்கள் கோவிலை மசூதியாக மாற்ற இந்தியா எதிர்ப்பு

பாகிஸ்தானின் லாகூரில் நவ்லாஹா பஜாரில் பிரசித்தி பெற்ற ஷாஹிதி அஸ்தான என்ற பிரசித்தி பெற்ற குருத்துவாரா உள்ளது. சீக்கியர்களின் புனித தலமான கருதப்படும் இந்த இடத்தில் மஸ்ஜித் ஷாஹித் கஞ்ச் என்ற மசூதி உள்ளது. எனவே பிரசித்தி பெற்ற குருத்துவாரா, மசூதிக்கு சொந்தமானது எனவும், அங்கு குருத்துவாராவை மசூதியாக மாற்ற ஏற்பாடு நடந்து வருவதாக புகார் எழுந்தது.இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாக். தூதரக மூலம் […]

வேல் வரைந்து கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த சிறுமிகள்..

கருப்பர் கூட்டம்’ என்ற பெயரில் செயல்பட்ட யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து, கோவையில் சுவர்களில் வேல் வரைந்து சிறுமிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று […]

ஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் ‘ஈஷா’ அறக்கட்டளைக்கு அங்கீகாரம்

கோவை, ஈஷா அறக்கட்டளைக்கு, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு, அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும். ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஈஷா […]