Category: Business

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் பறக்க 6 மாதம் தடை விதித்தது ஐரோப்பிய யூனியன்

லாகூர்: பாகிஸ்தானில் பணி புரிந்து வரும் 860 விமானிகளில் 262 பேர் போலியான உரிமம் வைத்துள்ளனர் அல்லது விமானி தேர்வில் முறைகேடு செய்தவர்கள் என அந்நாட்டு விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி குலாம் சர்வார் கான் கடந்த வாரம் பாரளுமன்றத்தில் தெரிவித்தார்.  இதில் பாதிக்கும் அதிகமானோர் பாகிஸ்தானின் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணிபுரிபவர்கள் என அவர் தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணிபுரியும் 434 விமானிகளில் 141 உடனடியாக பணியில் இருந்து […]

டிக்டாக், ஷேர்இட், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு தடை – சீனா கவலை

புதுடில்லி : நாட்டின் பாதுகாப்பு கருதி, ‘டிக்டாக், ஷேர்இட், ஹலோ’ உள்ளிட்ட, சீன நிறுவனங்களின், 59 மொபைல்போன், ‘ஆப்’களுக்கு மத்திய அரசு விதித்த தடையால், சீனா கலக்கம் அடைந்துள்ளது. ‘சர்வதேச முதலீட்டாளர்களின் உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு, இந்தியாவுக்கு உள்ளது’ என, சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலியுறுத்தியதுடன், இந்தத் தடை இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் […]

டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை! மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: லடாக் மோதலை தொடர்ந்து டிக்டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ‘ஆப்’களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்தால், இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல் பெரிதாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் இன்னும் பதற்றமான சூழலே நிலவுகிறது. சீனாவின் அத்துமீறலையடுத்து இந்திய அரசு, சீனாவுடனான வர்த்தகம் […]

பாட்னாவில் பெரிய பாலம் கட்டுவதற்காக சீன நிறுவனங்களுடன் செய்த ரூ.2,900 கோடி ஒப்பந்தம் ரத்து: பீகார்முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி

பீகார் தலைநகர் பாட்னாவில் பெரிய பாலம் கட்டுவதற்காக சீனா நிறுவனத்துடனான ரூபாய். 2,900 கோடி ஒப்பந்தத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. கடந்த 16ஆம் தேதி இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா-சீனா இடையே பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. பின்னர் இந்தியாவில் உள்ள பல இடங்களில் சீனாவை கண்டித்தும் மற்றும் பொருட்களை தவிர்ப்பதற்கு பெரும் ஆர்ப்பாட்டம் […]

பான் அட்டை, ஆதார் அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31, 2021வரை நீட்டிப்பு

  டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினை குறைப்பதை நோக்கமாக கொண்டு பல வாரங்களாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அது கைகொடுக்காத நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசின் பல நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இதற்கிடையில் நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான […]

ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு, அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூன் 26 ஆம் தேதி ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..! உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூன் 26 ஆம் தேதி ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கும் வேலைவாய்ப்பை அறிவிக்கவுள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் மாறும். மற்றும் ஊரடங்கு காலத்தில் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதன் மூலம் அதிக […]

சீனாவுடனான ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு

கல்வான் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததையடுத்து, சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர அரசு சீன நிறுவனங்களுடன் கையெழுத்திட்ட ரூ.5000 கோடி மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பால் சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ‘மேக்னடிக் மகாராஷ்டிரா 2.0 என்ற பெயரில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் சிங்கப்பூர், சீனா, […]

371 சீன பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு, மத்திய அரசு திட்டம்

புதுடில்லி: ரூ.9.50 லட்சம் கோடி மதிப்பிலான, 371 சீன பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய – சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். […]

சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ 471 கோடி ஒப்பந்தம் ரத்து

புதுடில்லி: இந்தியாவில் கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே ரயில் பாதையில் சிக்னல் தொலைத் தொடர்பு பணிகளைச் செய்ய சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா, மேற்கு வங்கத்தின் தங்குனி இடையே சரக்குப் போக்குவரத்திற்கென்றே தனி ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் உ.பி., கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே 417 கி.மீ., தூரத்திற்கு சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பணிகளைச் செய்யும் ஒப்பந்தம் ஒன்று […]