நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பரிசோதனை  முடிவுகள் பாஸிட்வ் என்று அமிதாப் பச்சன் ட்வீட் செய்து தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்று அமிதாப் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பு கொண்டவர்களும், கொரோனா பரிசோதனையை செய்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அமிதாப் பச்சனும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மகனும் நடிகருமான அபிஷேக் இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விரைவில் குணமடைய பிரார்த்தப்பாக பலரும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு பிரார்த்தனை செய்துள்ளனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *