பஜாஜ் உற்பத்தி ஆலையில் 250 பேருக்கு கொரோனா, செயல்பாட்டை நிறுத்தச் சொல்லும் ஊழியர்கள்!

இந்தியாவன் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜின், மகாராஷ்டிராவில் உள்ள உற்பத்தில் ஆலையில் 250 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆலையின் செயல்பாட்டை நிறுத்துமாறு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நாட்டில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவத் தொடங்கியபோது, இந்தியா லாக்டவுன் கட்டுப்பாடுகளை அறிவித்தது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் அந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல நிறுவனங்களும் தங்களின் பற்றாக்குறையை சமாளிக்க அதிக உற்பத்தியில் இறங்கின. அப்படித்தான் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருக்கும் பஜாஜ் உற்பத்தி ஆலையிலும் இரு சக்கர வாகன உற்பத்தி முடுக்கிவிடப்பட்டது. ஆனால் நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த ஆலையின் தொழிலாளர்களில் 250 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தொடர்ந்து செயல்படுவதில் பிரச்னை எழுந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *